உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 188:
 
::விஜயராகவன், என் தமிழ் நடையைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கு நன்றி. நான் ஏதும் சொல்லுவது முறையாகாது. மற்றவர்களோ, அல்லது காலமோ தான் பதில் சொல்லும். "கூர்ப்பித்த" என்று நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில் sharp, concise என்பதாக இருக்கும் என நினைக்கிறேன். நான் ஆங்கிலத்தில் சொல்வெதென்றால் lucid, understandable, sharp, concise, and beneficial என்பவைதான் என் குறிக்கோள். என் இலக்கை நான் எந்த அளவுக்கு எட்டுகிறேன் என்பதைப் பிறர்தான் சொல்ல வேண்டும். நீங்கள் "வெளியூர்ச்சிதமில்லாத அபிப்பிராயத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறீர்கள்" என்று கூறுவது " வெளி ஊர்ஜிதமில்லாத அபிப்பிராயத்திலேயே பிடிவாதமாகயிருக்கிறீர்கள்" என சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன். அதாவது external reference and support என்பதைத்தான் வெளி ஊர்ஜிதம் என்கிறீர்கள் என நினைக்கிறேன். இது உங்களுடைய தனிக்கருத்து. நீங்கள் சுட்டும் தமிழ் லெக்ஸிக்கனை ஆயிரக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன். லெக்ஸிக்கனை எனக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகத் தெரியும், பயன்படுத்தியும் இருக்கேன் (சிக்காகோ பலகலைக் கழகம் வலையேற்றும் முன்னரே). நான் கற்ற நூல்களையோ, நான் அறிந்தவற்றையோ ஒரு சிறிதும் அறியாமல் கூறும் உங்கள் கருத்துக்களுக்கு நான் என்ன மறுமொழி கூறுவது? நான் கற்றது கைமண்ணளவு எனினும், கற்றதில் குற்றம் குறை இருப்பின் திருத்திக் கொள்ள அணியமாய் (ready) இருக்கின்றேன். ஏற்க இயலாதவற்றை தக்கக் கரணியங்களோடு முன்வைத்துள்ளேன். எது செல்லும், எது செல்லாது, எது ஆதாரம், ஆதாரத்திற்கு ஆதாரம் யாது என்றெல்லாம் சிந்தித்தல் வேண்டும். நான் என் 13-14 அகவையில் (வயதில்) வெண்பாக்களும், கட்டளைக் கலித்துறையும், விருத்தமும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும் எனப் பல எழுதி என் தமிழாசிரியரால் புகழப்பட்டிருக்கின்றேன். தற்புகழ்ச்சியாய்க் கூறுவதாக எண்ண வேண்டாம். சிலவற்றைக் கூறித்தான் உணர்த்த வேண்டும் எனில், நான் விரும்பாவிட்டாலும் கூறித்தானே ஆக வேண்டியுள்ளது! ஊர்ஜிதம் என்று நீங்கள் கூறுவதின் ஊர்ஜிதம் உணர வேண்டும். அபிப்பிராயம் வேறு அறிவு வேறு. பிடிவாதம் வேறு அறிவடைப்படையில் உறுதிகொள்ளுதல் வேறு. கற்றார்முன் கற்ற செலச் சொல்லுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நன்னோக்கும் நல்லுணர்வும் நேர்மையும் வேண்டும். --[[பயனர்:செல்வா|செல்வா]] 15:47, 20 பெப்ரவரி 2007 (UTC)
 
 
கூர்ப்பித்த என்றால் improved என்ற பொருளில் (தொல்காப்பியருடையது) உபயோகப்படுத்தினேன்
அகராதிப்படி
 
கூர்ப்பு (p. 1075) [ kūrppu ] n kūrppu . < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.)
 
மேலும் பார்க்க
 
ஊர்ச்சிதம் (p. 0498) [ ūrccitam ] n ūrccitam . < ūrjita. 1. Confirmation, ratification; ஸ்திரம். 2. Import unity; compulsion; நிர்ப்பந்தம். அவ்வளவு ஊர்ச் சிதமாய்க் கேட்கக்கூடாது.
 
அகராதியில் ஊர்ஜிதம் என்று இல்லை ; நீங்கள் நான் கிரந்த விரும்பி என சொல்ல முடியாது :))
 
நான் சொன்னது கடுஞ்சொல்லாக தோன்றினால், மன்னிக்கவும்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 16:59, 20 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Vij" இலிருந்து மீள்விக்கப்பட்டது