நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
கடந்த ஐம்பது [[ஆண்டு|ஆண்டுகளில்]] உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30&nbsp;மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285&nbsp;மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் [[மாரடைப்பு]], [[பக்கவாதம்]], [[கூழ்மப்பிரிப்பு|கூழ்மப்பிரிப்புத்]] தேவைப்படும் [[சிறுநீரகச் செயலிழப்பு]], [[விரல்|விரல்களில்]] [[குருதி|குருதியோட்டம்]] குறைவதால் [[உறுப்பு நீக்கம்]] செய்தல், நீரிழிவுசார் [[விழித்திரை நோய்|விழித்திரைக் கோளாறு]] (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரழிவு ஒன்றாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது<ref>{{cite journal|last=Fasanmade|first=OA|coauthors=Odeniyi, IA, Ogbera, AO|title=Diabetic ketoacidosis: diagnosis and management|journal=African journal of medicine and medical sciences|date=2008 Jun|volume=37|issue=2|pages=99–105|pmid=18939392}}</ref> என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம்.
 
==இரண்டாம் வகை நீரிழிவின் அறிகுறிகளும் உணர்குறிகளும்==
==அறிகுறிகள்==
[[File:Main symptoms of diabetes.png|thumb|300 px|நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை]]
அடிக்கடி [[சிறுநீர்]] கழித்தல் (polyuria), அதிகமாக [[தாகம்|தாகமெடுத்தல்]] (polydipsia), அதிகமாகப் [[பசி]]யெடுத்தல் (polyphagia), எடை குறைதல் ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும்<ref name=Vij2010>{{cite journal|last=Vijan|first=S|title=Type 2 diabetes|journal=Annals of internal medicine|date=2010-03-02|volume=152|issue=5|pages=ITC31–15; quiz ITC316|pmid=20194231|doi=10.1059/0003-4819-152-5-201003020-01003}}</ref>.
வரிசை 25:
===சிக்கல்கள்===
இரண்டாம் வகை நீரிழிவு நாம் வாழும் காலத்தை [[பத்தாண்டு]] குறைக்கவல்ல ஒரு நாள்பட்ட நோயாகும்<ref name=Will2011>{{cite book|title=Williams textbook of endocrinology.|publisher=Elsevier/Saunders|location=Philadelphia|isbn=978-1437703245|pages=1371–1435|edition=12th}}</ref>. இது பகுதியாகக் கீழ்காணும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதால் விளைவதாகும்: இதயக்குழலிய நோய், [[பக்கவாதம்]] ஆகியவை நிகழ இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகமான இடரினைக் கொண்டிருப்பது, கீழ்விரலை நீக்குவது இருபது மடங்கு அதிகரிப்பது, அதிக அளவு [[மருத்துவமனை|மருத்துவமனையில்]] சிகிச்சைப் பெறவேண்டியக் கட்டாயம் ஆகியவற்றைக் கூறலாம்<ref name=Will2011/>. [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளிலும்]], மிகுதியாகப் பிற இடங்களிலும் நீரழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரழிவு இரண்டாம் வகை உள்ளவர்களில் இந்நோய் காயமில்லாத [[குருட்டுத் தன்மை]], நாள்பட்ட [[சிறுநீரகச் செயலிழப்பு]] நிகழப் பெருங்காரணியாக விளங்குகிறது<ref name=AFP09>{{cite journal |author=Ripsin CM, Kang H, Urban RJ |title=Management of blood glucose in type 2 diabetes mellitus |journal=Am Fam Physician |volume=79 |issue=1 |pages=29–36 |year=2009 |month=January |pmid=19145963 |doi= |url=}}</ref>. நீரழிவு இரண்டாம் வகையானது மூளையசதி நோய் (Alzheimer's disease), இரத்தநாளம் சார்ந்த அறிவாற்றல் இழப்பு (vascular dementia) முதலிய நோய்களின் செயல்முறைகள் மூலம் உணரறிவிய செயல் பிறழ்ச்சி (cognitive dysfunction), உளக்கேடு (dementia) ஆகிய இடர்கள் அதிகம் நிகழ்வதுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref>{{cite journal|last=Pasquier|first=F|title=Diabetes and cognitive impairment: how to evaluate the cognitive status?|journal=Diabetes & metabolism|date=2010 Oct|volume=36 Suppl 3|pages=S100–5|pmid=21211730|doi=10.1016/S1262-3636(10)70475-4}}</ref>. அடிக்கடி [[கிருமி|கிருமிகளால்]] தாக்கப்படுதல், [[பால்வினை நோய்கள்|பால்வினை செயல் பிறழ்ச்சி]] முதலியன பிற சிக்கல்களாகும்<ref name=Vij2010/>.
 
==காரணங்கள்==
வாழும் முறை, [[மரபியல்]] காரணிகள் ஆகியவைகளின் இணைவினால் இரண்டாம் வகை நீரிழிவு உருவாகிறது<ref name=AFP09/><ref name=Fat2009>{{cite journal |author=Risérus U, [[Walter Willett|Willett WC]], Hu FB |title=Dietary fats and prevention of type 2 diabetes |journal=Progress in Lipid Research |volume=48 |issue=1 |pages=44–51 |year=2009 |month=January |pmid=19032965 |doi=10.1016/j.plipres.2008.10.002 |pmc=2654180}}</ref>. இவற்றில் உணவு முறை, உடல் பருமன் போன்றவைத் தனிப்பட்டவரின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும் வயது, பாலினம், மரபியல் ஆகியவை ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவையாகும்.<ref name=Will2011/>. [[தூக்கம்|தூக்கக்]] குறைவு<ref>{{cite journal|last=Touma|first=C|coauthors=Pannain, S|title=Does lack of sleep cause diabetes?|journal=Cleveland Clinic journal of medicine|date=2011 Aug|volume=78|issue=8|pages=549–58|pmid=21807927|doi=10.3949/ccjm.78a.10165}}</ref>, [[கரு]] வளரும்போது உள்ள [[ஊட்டச்சத்து]] நிலைமை<ref>{{cite journal|last=Christian|first=P|coauthors=Stewart, CP|title=Maternal micronutrient deficiency, fetal development, and the risk of chronic disease|journal=The Journal of nutrition|date=2010 Mar|volume=140|issue=3|pages=437–45|pmid=20071652|doi=10.3945/jn.109.116327}}</ref> ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
 
===வாழும் முறை===
பல்வேறு வாழும் முறைக் காரணிகள் இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன: உதாரணமாக, [[உடல் பருமன்]], தேவையான [[உடல்]] உழைப்பு இல்லாதது, [[உணவு|உணவுக்]] குறைபாடுகள், [[மனம்|மன]] இறுக்கம், [[நகரம்|நகரமயமாதல்]] ஆகியவற்றைக் கூறலாம்<ref name=Will2011/>. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு 64% ஆண், 77% பெண் நோயாளிகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref>{{cite book|author=Peter G. Kopelman, Ian D. Caterson, Michael J. Stock, William H. Dietz|title=Clinical obesity in adults and children: In Adults and Children|publisher=Blackwell Publishing|location=|year=2005|pages=9 |isbn=140-511672-2|url=}}</ref>. பல உணவுகள், உதாரணமாக இனிப்பூட்டப்பட்ட பானங்களை அளவுக்கு அதிகமாக பருகுதல்<ref name=SSB2010>{{cite journal|last=Malik|first=VS|coauthors=Popkin, BM, Bray, GA, Després, JP, Hu, FB|title=Sugar Sweetened Beverages, Obesity, Type 2 Diabetes and Cardiovascular Disease risk|journal=Circulation|date=2010-03-23|volume=121|issue=11|pages=1356–64|pmid=20308626|doi=10.1161/CIRCULATIONAHA.109.876185|pmc=2862465}}</ref><ref>{{cite journal|last=Malik|first=VS|coauthors=Popkin, BM, Bray, GA, Després, JP, Willett, WC, Hu, FB|title=Sugar-Sweetened Beverages and Risk of Metabolic Syndrome and Type 2 Diabetes: A meta-analysis|journal=Diabetes care|date=2010 Nov|volume=33|issue=11|pages=2477–83|pmid=20693348|doi=10.2337/dc10-1079|pmc=2963518}}</ref>, உணவில் உள்ள [[கொழுப்பு]] வகைகள் ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் பங்காற்றுவதாகத் தெரிகிறது<ref name=Fat2009 />.
 
===மரபியல்===
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளில் பல [[மரபணு|மரபணுக்கள்]] தொடர்புடைவையாக உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் சிறிய அளவு பங்களித்து இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான [[நிகழ்தகவு|நிகழ்தகவை]] அதிகரிக்கின்றன<ref name=Will2011/>. 2011-ஆம் ஆண்டு [[ஆய்வு|ஆய்வுகளின்படி]] முப்பத்தியாறுக்கும் அதிகமான மரபணுக்கள் இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான சூழ் இடருக்கு பங்களிக்கின்றன<ref name=Genetic2011>{{cite journal|last=Herder|first=C|coauthors=Roden, M|title=Genetics of type 2 diabetes: pathophysiologic and clinical relevance|journal=European journal of clinical investigation|date=2011 Jun|volume=41|issue=6|pages=679–92|pmid=21198561|doi=10.1111/j.1365-2362.2010.02454.x}}</ref>. என்றாலும், இந்நோயின் மொத்த மரபுப் பொதிவுகளைக் கணக்கில் கொள்ளும்போது, இதுவரைக் கண்டறியப்பட்ட அனைத்து மரபணுக்களின் பங்கு பத்து சதவிகிதமேயாகும்<ref name=Genetic2011/>.
 
அரிதாக, ஒரேயொரு [[மரபணு]] முறைபிறழ்வினால் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றது (ஒற்றைப்பரம்பரையலகு நீரிழிவு வடிவம்)<ref name=Will2011/>. உதாரணங்கள்: இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரழிவு [maturity onset diabetes of the young (MODY)], டோனஃகு கூட்டறிகுறி, ராப்சன்-மென்டென்ஹால் கூட்டறிகுறி<ref name=Will2011/>. இளைய நீரழிவு நோயாளிகளில் ஒன்றிலிருந்து-ஐந்து சதவிகிதத்தினர் இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரழிவினைக் கொண்டவர்களாக உள்ளனர்<ref>{{cite news|first=|last=|coauthors=|title=Monogenic Forms of Diabetes: Neonatal Diabetes Mellitus and Maturity-onset Diabetes of the Young|date=|publisher=National Institute of Diabetes and Digestive and Kidney Diseases, NIH|url =http://www.diabetes.niddk.nih.gov/dm/pubs/mody/|work =National Diabetes Information Clearinghouse (NDIC)|accessdate=2008-08-04 }}</ref>.
 
===மருத்துவக் காரணங்கள்===
பல மருந்துகளும் உடல்நலக் குறைபாடுகளும் நீரழிவு நோய் உண்டாவதற்கான முன்னிணக்கத்தைத் தூண்ட முடியும்<ref name=BookDM2008>{{cite book|last=Bethel|first=edited by Mark N. Feinglos, M. Angelyn|title=Type 2 diabetes mellitus : an evidence-based approach to practical management|year=2008|publisher=Humana Press|location=Totowa, NJ|isbn=9781588297945|pages=462|url=http://books.google.ca/books?id=NctBmHUOV7AC&pg=PA462}}</ref>. உதாரணமாக கீழ்வரும் மருந்துகளைக் கூறலாம்: சிறுநீரகமுனைச்சுரப்பு இயக்க நீர்ப்பொருள்கள் (குளுக்கோக்கார்டிகாய்டுகள்), தையசைடுகள், பீட்டா-அண்ணீரக இயக்கிகள், ஆல்ஃபா-நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பிகள் (இன்ட்டர்ஃபெரான்கள்)<ref name=BookDM2008/>. முன்பு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்குட்பட்டவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளாக உருவாவதற்கான சாத்தியங்கள் அதிக அளவு உள்ளன<ref name=Vij2010/>. இந்நோயுடன் தொடர்புடைய பிற உடல் நலக்கேடுகள்: அங்கப்பாரிப்பு (acromegaly), குஷிங் கூட்டறிகுறி (Cushing's syndrome), மிகை [[தைராய்டு சுரப்பி|தைராய்டு சுரப்பிச்]] செயலாக்கம் (hyperthyroidism), பியோகுரோமோசைடோமா மற்றும் குளுக்ககோனோமா போன்ற சில புற்று நோய்கள்<ref name=BookDM2008/>. விரையில் உற்பத்தியாகும் இயக்கு நீர் (டெஸ்டோஸ்டிரோன்) குறைபாட்டுடனும் இரண்டாம் நிலை நீரிழிவு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref name=pmid19444934>{{cite journal |author=Saad F, Gooren L |title=The role of testosterone in the metabolic syndrome: a review |journal=The Journal of Steroid Biochemistry and Molecular Biology |volume=114 |issue=1–2 |pages=40–3 |year=2009 |month=March |pmid=19444934 |doi=10.1016/j.jsbmb.2008.12.022}}</ref><ref name=pmid18832284>{{cite journal |author=Farrell JB, Deshmukh A, Baghaie AA |title=Low testosterone and the association with type 2 diabetes |journal=The Diabetes Educator |volume=34 |issue=5 |pages=799–806 |year=2008 |pmid=18832284 |doi=10.1177/0145721708323100}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது