கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==அரசியல் வாழ்க்கை==
[[1931]] ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கஅரசாங்கச் சபைக்கான தேர்தலில் [[மன்னார்]]-[[முல்லைத்தீவு]]த் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. [[1934]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் [[பருத்தித்துறை]]த் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்கச் சபை உறுப்பினர் ஆனார். [[1936]] ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் [[1947]] ஆம் ஆண்டுவரை அரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.
 
[[1944]], [[ஆகஸ்ட் 29]] இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட [[சோல்பரி ஆணைக்குழு]] முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் [[ஐம்பதுக்கு ஐம்பது]] என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் [[1947]] இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த [[அருணாசலம் மகாதேவா]]வை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.
 
[[1948]] ஆம் ஆண்டில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், [[காங்கேசன்துறை]]யில் நிறுவப்பட்ட [[ காங்கேசன்துறை சீமெந்துத்சிமெண்ட் தொழிற்சாலை|சீமெந்துத் தொழிற்சாலைதொழிற்சாலையும்]]யும், [[வன்னி]]ப் பகுதிக்கு அண்மையில் [[பரந்தன்]] என்னுமிடத்தில் நிறுவப்பட்ட [[பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை|பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையும்தொழிற்சாலை]], கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]]க்கு அண்மையில் [[வாழைச்சேனை]]யில் ஏற்படுத்தப்பட்ட [[வழைச்சேனை காகித ஆலை|காகித ஆலையும்]] ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
 
==செல்வாக்குச் சரிவு==
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது