உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 276:
 
* கூர்ப்பித்தல் என்பது பற்றி நான் கூறும் முன் முதலில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். மேலே இட்ட வேண்டுகோளுக்கு இணங்கி செயல்படுங்கள். அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் போன்ற அற்புதங்களைத் துறை போகக் கற்றீர்களா, ஊன்றிக் கற்றதால்தான் "கூர்ப்பித்த" என்று ஆண்டீர்களா எனக் கூறுங்கள். இல்லை ஆழ்ந்து கற்காமல் கூகிள் தேடலில் இருந்து பிடித்து இட்டீர்களா என்று கூறுங்கள். மேலும் ஓரிரு இடத்தில் இருந்து "கூர்ப்பித்த" என்பதற்கு காட்டு தருவீர்களா? பித்தன், பித்தன் சூலம் என்றால் என்ன என்று அறிவீர்களா? மெய்யியலில் இழையோடும் பரிமொழி பற்றி அறிவீர்களா? --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:00, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
 
செல்வா, உங்கள் இலக்கண ஞானத்தை மதிக்கிறேன். நான் இலக்கண பிழைகளை செய்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் செய்யாதவற்றை என் மீது போடுகிறீர்கள். 'வேண்டுமென்றே பொல்லாங்கும் விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முக' என பலவாறு வசைபாடியுள்ளீர்கள்; முன்பு, நான் எதோ தமிழற்ற சொல்களை 'திணிப்பதாக' சொன்னீர்கள். இது ஒன்றும் சரியல்ல. நான் எல்லோரையும் மதிப்புடன் பேசி, தர உயர்வு ஏற்படுமாறு கருத்துகளை வைக்கிறேன்.த.வி. நடத்துதல் பேசிய பற்றிய பேச்செல்லாம், தர உயர்வு பற்றிதான். உதாரணமாக இன்றும் ஆலமரத்தில், தனிமனிதர் பிளாக்குகளின் துணை வேண்டாம் என்று சொல்லி, அதன் காரணங்களை சொல்லியுள்ளேன். இது பொறுப்பு இல்லை என்றால், எதுதான் அது. அதனால் உங்கள் வசைகளும், பொறுப்பு பற்றிய அறிவுரைகளும் மிகை என தோன்றுகிறது. எதிர்கால ஆய்வாளர் நான் எழுதியதைப் பார்த்து தவறான முடிவுக்கு வருவார் என்பது உங்கள் கற்பனை. எதிர்கால ஆய்வாளர் எப்படியெல்லாம் செய்யலாம் என்று நினைத்து, நாம் போக்கை மாற்றமுடியாது. I'll do my best today, you can do your worst tomorrow எனதான் கருதுகிறேன். உங்கள் தர்க்க யுக்திகள் ஆச்சரியமாக உள்ளது ; வசை பாடுவது நீங்கள்; ஆனால் "பொல்லாங்கும் ,விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முகம் செய்வது' மற்றவர்கள். மற்றவர்கள் சொற்களை நிறைய மாற்றுவது நீங்கள் - ஆனால் 'திணிப்பு' பழி மற்றவர்கள்மேல்.உங்கள் அறிவுரைகளை நீங்கள் கொஞ்சம் ஏற்றால் சாலச்சிறந்த்து.
 
 
ஏதோ கூகிளிலும், மற்ற இணைகளிலும் நமக்கு வேண்டிய தகவல் தேடக்கூடாது போல சொகிறீர்கள். இதில் தவறே இல்லை. பல தமிழிலக்கியம் இணையில் அகப்படுகிரது. அதனால், நமது இலக்கண அறிவை வளர்த்த இணை துணையாகும். த.வி.யே அதைச் சார்ந்ததுதானே. அருணகிரியார் பற்றிய தளத்துக்கு சென்று, 'கூர்பித்திய' என்பதின் பொருளறிந்தேன்.
 
"கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் ....."
 
என்பதற்க்கு பொருள்
 
".......ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, .......".
 
இலக்கணத்தை தமிழில்க்கியம் தரும் உதாரணங்களால் ஏற்பது/மறுப்பது தவறா?
 
 
உங்கள் கேள்விகளுக்கு
 
"முதலில் தொல்காப்பியர் கூர்ப்பித்த என்பதைக் சொல்லவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். " ஒத்துக் கொள்கிறேன்
 
"..பொருளற்ற உ+இத்தல் கொள்கை பினாத்தல் (அறியாது உளறுதல்) என ஒப்புக்கொள்ளுங்கள்" . இதில் பினாத்தலே இல்லை. நான் எற்கனெவே சொன்னாற்ப்போல், எண் அணுகுமுறை empirical, புறவயமானது. ஒரு மேற்கோள் சரியில்லையென்றால். அதனை விட்டுவிடுவேன். பலன் கொடுக்கும் மேற்கோளை எடுப்பேன். நீங்கள் சொல்லும் இலக்கணம் சரியென்றால், அதையே ஏற்ப்பேன்.
 
"கூகிள் தேடலில் பெறும் தொடர்களைக் கொண்டு செறிவான உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள் எனவும் ஒப்புக்கொள்ளுங்கள்" உங்கள் வசைபாடுதலை 'சாமர்த்தியம்' என்று தவறாக கருதுகிறீர்கள்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 19:34, 22 பெப்ரவரி 2007 (UTC)
 
== தமிழ் எழுத்துக்கூட்டல் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Vij" இலிருந்து மீள்விக்கப்பட்டது