தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
[[File:Gushi Khan Fresco.jpg|thumb|right|150px|குஷி/குஷ்ரி கான் (1582–1655)]]
இந்த புதிய மதப்பிரிவின் ஆதி குருவான இட்ஜோங்க்பா தனது அண்ணன் மகனான "கெடுங்ட்ராப்" (கெண்டுன் ட்ரப்) என்பவரை மதக்கோட்பாடுகளுக்கேற்ப வளர்த்து வந்தார். அவரை இட்ஜோங்க்பா மரணத்தறுவாயில் மஞ்சள் புத்த சமயத்தின் மதகுருவாக தலைமைப் பீடத்தில் அமர்த்தினார். அந்த மதகுருதான் முதல் தலாய் லாமா(மஞ்சள் புத்தமதத் தலைவர்) என அங்கீகரிக்கபட்டார். கி பி 1391 முதல் 1474 ஆம் ஆண்டு வரை இருந்த முதல் தலாய் லாமாவை சீனாவை ஆண்ட அரச குடும்பங்களும் அங்கீகரித்தன.
 
பதினேழாம் நூற்றாண்டில் திபெத்தில் ஆங்காங்கே உள்நாட்டுக் கலவரங்கள் மூண்டன. அக்கலவரங்களை அடக்கி தனது தலைமைப் பொறுப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அப்போதைய தலாய் லாமா ''இங்குவாங் லோப்சாங்கியட்சோ'' (5ஆம் தலாய் லாமா) சீனாவின் இராணுவ உதவியை நாடினார் கி பி 1641 ஆம் ஆண்டு சீனப் பேரரசர் தனது படைகளை அனுப்பிப் போராட்டத்தை அடக்கினார். தலாய் லாமாவின் அங்கீகாரத்தை நிலை நாட்டினார். சீன முத்திரையை வழங்கிய சீனப் பேரரசர், இனி தலாய் லாமா மன்னருக்கு உரிய எல்லா அதிகாரங்களும் பெறுவார் என உத்தரவிட்டதும் அப்போதைய திபெத் மன்னன் சீன அதிகாரத்திற்கு அஞ்சி அதற்கு உடன்பட்டான். இதிலிருந்தே திபெத்திய தலாய் லாமாக்கள் அரசியலில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்கள்.
 
==பஞ்சென் லாமா==
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது