நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 17:
[[உணவு]]முறையைச் சீரமைப்பதன் மூலமும், [[உடற்பயிற்சி|உடற்பயிற்சியினை]] அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் [[இரத்தம்|இரத்த]] [[குளுக்கோசு]] அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின், இன்சுலின் போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்ஙனம், இன்சுலினை உபயோகிப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
 
கடந்த ஐம்பது [[ஆண்டு|ஆண்டுகளில்]] உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30&nbsp;மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285&nbsp;மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் [[மாரடைப்பு]], [[பக்கவாதம்]], [[கூழ்மப்பிரிப்பு|கூழ்மப்பிரிப்புத்]] தேவைப்படும் [[சிறுநீரகச் செயலிழப்பு]], [[விரல்|விரல்களில்]] [[குருதி|குருதியோட்டம்]] குறைவதால் [[உறுப்பு நீக்கம்]] செய்தல், நீரிழிவுசார் [[விழித்திரை நோய்|விழித்திரைக் கோளாறு]] (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு ஒன்றாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது<ref>{{cite journal|last=Fasanmade|first=OA|coauthors=Odeniyi, IA, Ogbera, AO|title=Diabetic ketoacidosis: diagnosis and management|journal=African journal of medicine and medical sciences|date=2008 Jun|volume=37|issue=2|pages=99–105|pmid=18939392}}</ref> என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம்.
 
==இரண்டாம் வகை நீரிழிவின் அறிகுறிகளும் உணர்குறிகளும்==
வரிசை 24:
 
===சிக்கல்கள்===
இரண்டாம் வகை நீரிழிவு நாம் வாழும் காலத்தை [[பத்தாண்டு]] குறைக்கவல்ல ஒரு நாள்பட்ட நோயாகும்<ref name=Will2011>{{cite book|title=Williams textbook of endocrinology.|publisher=Elsevier/Saunders|location=Philadelphia|isbn=978-1437703245|pages=1371–1435|edition=12th}}</ref>. இது பகுதியாகக் கீழ்காணும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதால் விளைவதாகும்: இதயக்குழலிய நோய், [[பக்கவாதம்]] ஆகியவை நிகழ இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகமான இடரினைக் கொண்டிருப்பது, கீழ்விரலை நீக்குவது இருபது மடங்கு அதிகரிப்பது, அதிக அளவு [[மருத்துவமனை|மருத்துவமனையில்]] சிகிச்சைப் பெறவேண்டியக் கட்டாயம் ஆகியவற்றைக் கூறலாம்<ref name=Will2011/>. [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளிலும்]], மிகுதியாகப் பிற இடங்களிலும் நீரழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரழிவு இரண்டாம் வகை உள்ளவர்களில் இந்நோய் காயமில்லாத [[குருட்டுத் தன்மை]], நாள்பட்ட [[சிறுநீரகச் செயலிழப்பு]] நிகழப் பெருங்காரணியாக விளங்குகிறது<ref name=AFP09>{{cite journal |author=Ripsin CM, Kang H, Urban RJ |title=Management of blood glucose in type 2 diabetes mellitus |journal=Am Fam Physician |volume=79 |issue=1 |pages=29–36 |year=2009 |month=January |pmid=19145963 |doi= |url=}}</ref>. நீரழிவு இரண்டாம் வகையானது மூளையசதி நோய் (Alzheimer's disease), இரத்தநாளம் சார்ந்த அறிவாற்றல் இழப்பு (vascular dementia) முதலிய நோய்களின் செயல்முறைகள் மூலம் உணரறிவிய செயல் பிறழ்ச்சி (cognitive dysfunction), உளக்கேடு (dementia) ஆகிய இடர்கள் அதிகம் நிகழ்வதுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref>{{cite journal|last=Pasquier|first=F|title=Diabetes and cognitive impairment: how to evaluate the cognitive status?|journal=Diabetes & metabolism|date=2010 Oct|volume=36 Suppl 3|pages=S100–5|pmid=21211730|doi=10.1016/S1262-3636(10)70475-4}}</ref>. அடிக்கடி [[கிருமி|கிருமிகளால்]] தாக்கப்படுதல், [[பால்வினை நோய்கள்|பால்வினை செயல் பிறழ்ச்சி]] முதலியன பிற சிக்கல்களாகும்<ref name=Vij2010/>.
 
==காரணங்கள்==
வாழும் முறை, [[மரபியல்]] காரணிகள் ஆகியவைகளின் இணைவினால் இரண்டாம் வகை நீரிழிவு உருவாகிறது<ref name=AFP09/><ref name=Fat2009>{{cite journal |author=Risérus U, [[Walter Willett|Willett WC]], Hu FB |title=Dietary fats and prevention of type 2 diabetes |journal=Progress in Lipid Research |volume=48 |issue=1 |pages=44–51 |year=2009 |month=January |pmid=19032965 |doi=10.1016/j.plipres.2008.10.002 |pmc=2654180}}</ref>. இவற்றில் உணவு முறை, உடல் பருமன் போன்றவைத் தனிப்பட்டவரின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும் வயது, பாலினம், மரபியல் ஆகியவை ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவையாகும்.<ref name=Will2011/>. [[தூக்கம்|தூக்கக்]] குறைவு<ref>{{cite journal|last=Touma|first=C|coauthors=Pannain, S|title=Does lack of sleep cause diabetes?|journal=Cleveland Clinic journal of medicine|date=2011 Aug|volume=78|issue=8|pages=549–58|pmid=21807927|doi=10.3949/ccjm.78a.10165}}</ref>, [[கரு]] வளரும்போது உள்ள [[ஊட்டச்சத்து]] நிலைமை<ref>{{cite journal|last=Christian|first=P|coauthors=Stewart, CP|title=Maternal micronutrient deficiency, fetal development, and the risk of chronic disease|journal=The Journal of nutrition|date=2010 Mar|volume=140|issue=3|pages=437–45|pmid=20071652|doi=10.3945/jn.109.116327}}</ref> ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
 
===வாழும் முறை===
வரிசை 51:
 
==பிரித்தறிதல்==
நீரிழிவு நோயாளிகளை உலகளாவிய பிரித்தறியும் சோதனைகளைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்பது நோய்க்கண்டறிதலை மேம்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் எந்தவொரு பெருங்குழுமமும் இவற்றைப் பரிந்துரை செய்யவில்லை<ref name=Screen09>{{cite journal |author=Valdez R |title=Detecting Undiagnosed Type 2 Diabetes: Family History as a Risk Factor and Screening Tool |journal=J Diabetes Sci Technol |volume=3 |issue=4 |pages=722–6 |year=2009 |pmid=20144319 |pmc=2769984 |doi= |url=}}</ref>. பெரியவர்களில் நோய் அறிகுறிகளில்லாத ஆனால் [[இரத்த அழுத்தம்]] 135/80&nbsp;மில்லிமீட்டர் [[பாதரசம்]] (mmHg) அளவுகளுக்கு மேல் இருப்பவர்களுக்குப் பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கத் தடுப்பு சிறப்புப் பணிப்பிரிவு பரிந்துரைக்கின்றது<ref name=US08>{{cite web |url=http://www.uspreventiveservicestaskforce.org/uspstf/uspsdiab.htm |title=Screening: Type 2 Diabetes Mellitus in Adults |year=2008 |work=U.S. Preventive Services Task Force |accessdate=}}</ref>. இந்த அளவுகளுக்கு கீழ் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்று பரிந்துரைக்க போதிய ஆதாரங்கள் இல்லை<ref name=US08/>. அதிக அளவு நீரிழிவிற்கான இடரினைக் கொண்டவர்களில் மட்டும் இச்சோதனைகளைச் செய்யலாமென [[உலக சுகாதார அமைப்பு]] பரிந்துரைச் செய்கின்றது<ref name=Screen09/>. ஐக்கிய அமெரிக்காவில் நீரிழிவிற்கான அதிக இடரினைக் கொண்ட குழுக்கள்: நாற்பத்தியைந்து வயதிற்கும் மேற்பட்டவர்கள், நீரிழிவு சொந்தங்களைக் கொண்டவர்கள், சில [[இனக் குழு|இனக் குழுக்கள்]] (இஸ்பானிக்குகள், [[ஆப்பிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்]], அமெரிக்கப் பழங்குடியினர்), கர்ப்பகால நீரிழிவு வரலாற்றினைக் கொண்டவர்கள், பலவுறை அண்ட நோய்கூட்டறிகுறி (polycystic ovary syndrome) கொண்டவர்கள், அதீத எடை உள்ளவர்கள், [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] நோய்கூட்டறிகுறி உள்ளவர்கள்<ref name="Vij2010" />.
 
==தடுப்பு முறைகள்==
வரிசை 57:
 
==நோய் மேலாண்மை==
வாழும் முறைகளில் குறுக்கிட்டு செய்யும் மாற்றங்கள், இதயக்குழலிய நோய் இடர் காரணிகளைக் குறைத்தல், இரத்த குளுக்கோசு அளவுகளை சாதாரண அளவில் வைத்திருத்தல் போன்றவை இரண்டாம் நிலை நீரிழிவைச் சமாளிப்பதற்கான வழி முறைகளின் ஒருமுகப்படுத்திய நோக்கமாகும்<ref name=AFP09>{{cite journal |author=Ripsin CM, Kang H, Urban RJ |title=Management of blood glucose in type 2 diabetes mellitus |journal=Am Fam Physician |volume=79 |issue=1 |pages=29–36 |year=2009 |month=January |pmid=19145963 |doi= |url=}}</ref>. புதிதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வகை நோயாளிகள் தங்களின் இரத்த குளுக்கோசு அளவுகளைச் சுயப்பரிசோதனைச் செய்துக் கொள்வதை 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய தேசிய நலச் சேவை மையம் பரிந்துரைச் செய்திருந்தது<ref>{{Cite web|title=Clinical Guideline:The management of type 2 diabetes (update)|url=http://www.nice.org.uk/guidance/index.jsp?action=byID&o=11983}}</ref>, என்றாலும் இன்சுலின் பன்முகச் சிகிச்சைக்கு உட்படாதவர்கள் சுயப் பரிசோதனை செய்துக்கொள்வதன் பயன் கேள்விக்குரியதே<ref name=AFP09/>. பிற இதயக் குழலிய நோய் இடர் காரணிகளை [[[உயர் இரத்த அழுத்தம்]], அதிகக் [[கொலஸ்டிரால்]], சிறுநீரில் நுண்ணியவெண்புரத ([[ஆல்புமின்]]) அளவுகள்] சமாளிப்பது ஒருவரின் வாழ்நாளைக் கூட்டுகிறது எனலாம்<ref name=AFP09/>. செந்தர இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன் ஒப்பீடு செய்யும்போது, தீவிரமாக இரத்த சர்க்கரையைக் குறைப்பது மரணத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை<ref>{{cite journal|last=Boussageon|first=R|coauthors=Bejan-Angoulvant, T, Saadatian-Elahi, M, Lafont, S, Bergeonneau, C, Kassaï, B, Erpeldinger, S, Wright, JM, Gueyffier, F, Cornu, C|title=Effect of intensive glucose lowering treatment on all cause mortality, cardiovascular death, and microvascular events in type 2 diabetes: meta-analysis of randomised controlled trials|journal=BMJ (Clinical research ed.)|date=2011-07-26|volume=343|pages=d4169|pmid=21791495|doi=10.1136/bmj.d4169|pmc=3144314}}</ref>. சிகிச்சையின் இலக்கானது குறிப்பாக கிளைக்கோசிலாக்கப்பட்ட [[ஈமோகுளோபின்]] (HbA1C) அளவுகளை ஏழு சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைப்பது அல்லது [[உண்ணாநிலை]] [[குளுக்கோசு]] [6.7&nbsp;மில்லிமோல்/லிட்டர் (120&nbsp;மில்லிகிராம்/டெசிலிட்டர்)] அளவுகளுக்குக் கீழாகக் குறைப்பதென்றாலும் இத்தகு இலக்குகள் தாழ்நிலை இரத்தச் [[சர்க்கரை]] அளவினால் ஏற்படும் குறிப்பிட்ட இடர்கள், வாழும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு [[மருத்துவர்|மருத்துவரின்]] ஆலோசனையின் பேரில் மாற்றப்படலாம்<ref name=Vij2010/>.
 
===[[மருந்து|மருந்துகள்]]===
[[Image:Metformin 500mg Tablets.jpg|thumb|மெட்ஃபார்மின் 500 மில்லிகிராம் வில்லைகள்]]
நீரிழிவிற்கு எதிரான பல்வேறு வகை மருந்துகள் உள்ளன. மெட்ஃபார்மின் மரணவீதத்தைக் குறைப்பதற்கான நல்ல ஆதாரங்கள் இருப்பதால், பொதுவாக முதலில் பரிந்துரைக்கப்படுகிறது<ref name=AFP09/>. வாய்வழி மருந்துகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன<ref name=AFP09/>. இரண்டாம் வகை நீரிழிவை குணப்படுத்த உபயோகிக்கப்படும் பிற மருந்து வகைகள் பின்வருமாறு: சல்போனைல்யூரியாக்கள், சல்போனைல்யூரியா இல்லாத சுரப்புத் தூண்டிகள், கிளைக்கோசைல் நீராற்பகுப்பித் தடுப்பிகள் (கிளைக்கோசைடு நீராற்பகுப்பித் தடுப்பிகள்), தியசோலிடின்டையோன்கள்<ref name=AFP09/>. இருந்தபோதிலும், [[சிறுநீரகம்|சிறுநீரக]], [[கல்லீரல்]] பிரச்சனைகள் உள்ளவர்கள் மெட்ஃபார்மினை உபயோகிக்கக் கூடாது<ref name=Vij2010/>.
 
[[வாய்|வாய்வழி]] மருந்துகளைத் தொடரும்போதும், இன்சுலினை உபயோகிக்க நேர்ந்தால் [[இரவு|இரவில்]] நெடுநேரம் செயல்புரியும் தயாரிப்பைச் சேர்க்கிறார்கள்<ref name=Vij2010/><ref name=AFP09/> மருந்து அளவுகள் அதற்கேற்றார்போல் அதிகப்படுத்தப்படுகிறது<ref name=AFP09/>. இரவில் கொடுக்கும் [[இன்சுலின்]] போதுமான விளைவை ஏற்படுத்தாதபோது, ஒரு நாளைக்கு இருமுறை இன்சுலினைப் பயன்படுத்துவது மேம்பட்ட [[நோய்]] கட்டுபாட்டினைக் கொண்டுவரலாம்<ref name=Vij2010/>. நெடுநேரம் செயல்புரியும் இன்சுலின்கள் (கிளார்ஜின், டெடமிர் போன்றவை), என்.பி.எச் (NPH) இன்சுலினைக் காட்டிலும் மேம்பட்டவை இல்லையென்றாலும், இவற்றைத் தயாரிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளதால் திறம்பட்ட விலை இவைகளுக்கு 2010-ஆம் ஆண்டு வரை இல்லை<ref>{{cite journal|last=Waugh|first=N|coauthors=Cummins, E, Royle, P, Clar, C, Marien, M, Richter, B, Philip, S|title=Newer agents for blood glucose control in type 2 diabetes: systematic review and economic evaluation|journal=Health technology assessment (Winchester, England)|date=2010 Jul|volume=14|issue=36|pages=1–248|pmid=20646668|doi=10.3310/hta14360}}</ref>. கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் சிகிச்சையே பொதுவாகச் சிறந்ததாகும்<ref name=Vij2010/>.
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது