பின்னடைவானது (மரபியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up
வரிசை 10:
[[மரபியல்|மரபியலில்]] '''பின்னடைவானது''' என்றால், ஒரு தனி [[மரபணு]]வில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது [[எதிருரு]]க்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது எதிருருவினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகும். இதனால் குறிப்பிட்ட பின்னடைவான இயல்பின் [[தோற்றவமைப்பு]] வெளித்தெரிய வேண்டுமாயின், பின்னடைவான எதிருருக்கள் சமநுக அமைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியல்லாமல் இதரநுக அமைப்பில் இருக்குமாயின், பின்னடைவான எதிருருவுக்குரிய தோற்றவமைப்பு மற்றைய [[ஆட்சியுடையது (மரபியல்)|ஆட்சியுடைய]] எதிருருவினால் மறைக்கப்பட்டு விடும்.
 
இரு எதிருருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன [[பூ]]வின் [[நிறம்|நிறத்திற்குக்]] காரணமான மரபணுவில் உள்ள இரு எதிருருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான [[மரபணுவமைப்பு]]க்கள் தோன்றலாம். b எதிருருவானது, B எதிருருவுக்குப் பின்னடைவானதாயின், Bb என்ற மரபணுவமைப்பில் b க்குரிய வெள்ளை நிறம் வெளிக்காட்டப்படாது. பதிலாக ஊதா நிறமே வெளித்தெரியும். ஆனால் bb மரபணுவமைப்பானது வெல்லை நிறப் பூவைத் தரும்.
நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.
 
வரிசை 17:
*[[குருதி உறையாமை]] - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னடைவான எதிருரு காரணமாகின்றது.
*[[நிறக்குருடு]] - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னடைவான எதிருரு காரணமாகின்றது.
[[பகுப்பு:மரபணு]]
 
"https://ta.wikipedia.org/wiki/பின்னடைவானது_(மரபியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது