வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
 
[[ஆன்ட்டொயின் இலவோசியே]] என்பவர் 1783 ஆம் ஆண்டில் திணிவுக் காப்புக் கோட்பாட்டையும், 1800ல் [[ஜான் டால்ட்டன்]] அணுக் கோட்பாட்டையும் வெளியிட்டனர். உண்மையில் இதன் பின்னரே வேதியியல் முதிர்ச்சியடைந்தது எனலாம். திணிவுக் காப்பு விதியினதும், லவோய்சியரின் முயற்சிகளையே பெரிதும் அடிப்படையாகக் கொண்ட எரிதலுக்கான ஒட்சிசன் கோட்பாடினதும் விளைவாக வேதியியலை மீளுருவாக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. எல்லாச் சோதனைகளையும், ஒரே கோட்பாட்டுச் சட்டகத்துள் பொருத்துவதற்கான முயற்சியே இலவோசியே வேதியியலுக்கு அளித்த அடிப்படையான பங்களிப்பு ஆகும்.
 
இலவோசியே வேதியியல் சமநிலையின் தொடர்ச்சியான பயன்பாட்டை நிலை நிறுத்தினார், ஒட்சிசனைப் பயன்படுத்தி பிளாசித்தன் கோட்பாட்டைத் தூக்கியெறிந்தார், புதிய வேதியியல் பெயரிடல் முறை ஒன்றை உருவாக்கியதுடன் நவீன மீட்டர் அளவு முறைக்கும் பங்களிப்புச் செய்துள்ளார். பழைய, வழக்கொழிந்த வேதியியல் சார்ந்த சொற்களையும் தொழில்நுட்ப மொழியையும் பெரும்பாலும் கல்வியறிவு அற்ற பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பதிலும் இலவோசியே ஈடுபட்டார். இதனால் வீதியியல் குறித்த மக்களின் ஈடுபாடு கூடியது. வேதியியலில் ஏற்பட்ட இத்தகைய முன்னேற்றங்கள் "வேதியியல் புரட்சி" என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை ஏற்படக் காரணமாயின. இலவோசியேயின் பங்களிப்புக்கள், உலகம் முழுதும் இன்று கல்வி நிலையங்களில் கற்கப்படும் நவீன வேதியியல் உருவாக வழிசமைத்தன. இதனாலும், அவரது பிற பங்களிப்புக்களினாலும் இலவோசியே நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
 
== பருப்பொருட்களின் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது