வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
வேதியியல் தனிமங்களைப் பொதுவாக ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கமைக்கின்றனர். இதில் தனிமங்கள் அணுவெண்களின் அடிப்படையிலும், இலத்திரன் அமைப்பின் அடிப்படையில் கூட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள நிரல்கள் கூட்டங்களையும், கிடை வரிசைகள் ஆவர்த்தனங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட கூட்டங்களில் அல்லது ஆவர்த்தனங்களில் இருக்கும் தனிமங்கள் [[அணு ஆரை]], [[இலத்திரன் இழுதிறன்]] போன்ற சில பொது இயல்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
 
* [[===சேர்மம்]]===
சேர்மம் என்பது, குறிப்பிட்ட சில வேதியியல் தனிமங்களின் அணுக்களைக் குறிப்பிட்ட விகிதத்திலும், குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிலும் கொண்டுள்ள ஒரு வேதிப்பொருள். இது கொண்டுள்ள தனிமங்கள் அதன் சேர்க்கையையும், ஒழுங்கமைப்பு சேர்மத்தின் வேதியியல் இயல்புகளையும் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, "நீர்" என்பது [[ஐதரசன்]] (ஹைட்ரஜன்), [[ஒட்சிசன்]] (ஆக்சிஜன்) ஆகிய தனிமங்களின் அணுக்களை இரண்டுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் கொண்டுள்ள ஒரு சேர்மம். இதில், ஒட்சிசன் இரண்டு ஐதரசன் அணுக்களுக்கு நடுவே தம்மிடையே 104.5° கோணத்தை உருவாக்கும்படி பிணைக்கப்பட்டு உள்ளது. சேர்மங்கள் உருவாவதும், அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதும் [[வேதிவினை]]களின் காரணமாக நடைபெறுகின்றன.
 
===வேதிப்பொருள்===
வேதிப்பொருள் என்பது குறித்த சேர்க்கைப் பொருள்களையும், இயல்புகளையும் கொண்ட ஒரு பொருள். இது சேர்வைகள், தனிமங்கள் அல்லது சேர்வைகள் தனிமங்கள் இரண்டினதும் கலவை ஆகும். அன்றாட வாழ்க்கையில் காணும் பெரும்பலான வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக் கலவைகளே. வளி, கலப்புலோகம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, [[தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியம்|தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால்]] உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுக்கு]] கரிமப் பெயரிடல் முறையும், [[லனிமச் சேர்மம்|கனிமச் சேர்மங்களுக்குப்]] பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன.
 
* [[சேர்மம்]]
* [[மூலக்கூறு]]
* அயனிகளும் உப்புக்களும்
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது