தோல் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''தோற் புற்றுநோய்''' அல்லது '''தோல் புற்றுநோய்''' என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோயகளைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்க்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. <ref name = "NCI">National Cancer Institute — Common Cancer Types (http://www.cancer.gov/cancertopics/commoncancers)</ref>
 
தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விடப் பொதுவாக மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் ஒன்று சேர்ந்து காணப்படுகின்றன.<ref name = "NCI"></ref> தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/தோல்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது