"தூக்கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
(தூக்கான் என மாற்றம்)
== தூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ''ராம்ஃபசுட்டோசு டோக்கோதோக்கோ'' (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் [[அகச்சிவப்புக் கதிர்]]படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்<ref>Science 325, 468–470 (2009)</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/8165895.stm Hot secret behind toucan's bill], பிபிசி செய்தி</ref>. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.
 
== மேற்கோள்கள்==
21,062

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1066365" இருந்து மீள்விக்கப்பட்டது