மேரி பென்னிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மேரி ஏஞ்சல் பென்னிங்டன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மேரி ஏஞ்சல் பென்னிங்டன்''' (1872,அக்டோபர் 8 - 1952,டிசம்பர் 27) எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கியவர். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்லும் இம்முறையைக் கண்டறிந்ததன் மூலம் குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்டவர். பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.
==பிறப்பும் இளமையும்==
அமெரிக்காவில் உள்ள நாஷ்வெயில் என்ற கிராமத்தில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பிறந்தார், மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் - தாய் சாரா மொலோனி. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் கண்டறியும் முயற்சியில் சிறுமியாக இருந்த மேரி ஈடுபட்டார்.
==கல்வி==
1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனிய பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 'டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில்' இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது. 1890-ல் பள்ளிப்படிப்பை முடித்தவர், பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள் என இருந்த அக்காலத்தில் 1892-ம் ஆண்டே அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும்.
 
அவருக்கு இளம் அறிவியல் பட்டம் வழங்க முடியாத பென்சில்வேனிய பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தவிர்க்க இயலாத சமயங்களில் பெண்களுக்கு முனைவர் பட்டம் தரலாம் என்ற சட்டத்தில் உள்ள சலுகையைப் பயன்படுத்தி, இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என 'நேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆப் பேம்' என்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய நூலில், மேரியின் பட்டப் படிப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது
==பணி==
1904-ம் ஆண்டு பிலடெல்பிய சுகாதாரத்துறை, தனது துறை ஆய்வக மேற்பார்வையாளராக மேரியை நியமித்தது. தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு 1906-ம் ஆண்டு அவர் விண்ணப்பித்த போது, உணவுப்பொருட்களை பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குறைந்த வெப்பநிலையே சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்திருந்தார். அதுவரை உயர்வெப்பமே உணவைப் பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க சிறந்தது எனக் கருதப்பட்டது.
==ஆய்வுகள்==
மேரி தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை. மேலும், பால் பதனிடுவதைக் கண்டுபிடித்தவரும் இவர் தான்.
 
==மறைவு==
அமெரிக்க குளிர்சாதனப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர்,
1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இறந்தார்.
==உசாத்துணை==
*[http://tamilthamarai.com/science-articles/1098-2011-05-26-19-16-25.html| தமிழ்தாமரை வலைதளம்]
"https://ta.wikipedia.org/wiki/மேரி_பென்னிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது