மேரி பென்னிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் மேரி ஏஞ்சல் பென்னிங்டன்., மேரி பென்னிங்டன். என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள...
No edit summary
வரிசை 1:
[[File:Mary Engle Pennington as a young girl.jpg|thumb|இளம் வயதில் மேரி ஏங்கல் பென்னிங்டன்]]
'''மேரி ஏஞ்சல் பென்னிங்டன்''' (Mary Engle Pennington, 1872,அக்டோபர் 8 - 1952,டிசம்பர் 27) அமெரிக்க வேதியியலாளர். எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கியவர். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்லும் இம்முறையைக் கண்டறிந்ததன் மூலம் குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்டவர். பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.
==பிறப்பும் இளமையும்==
அமெரிக்காவில் உள்ள நாஷ்வெயில் என்ற கிராமத்தில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பிறந்தார், மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் - தாய் சாரா மொலோனி. மேரி பிறாந்தவுடன்பிறந்தவுடன் இவரது குடும்பம் பிலடெல்பியாவிற்குக் குடியேறியது. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் கண்டறியும் முயற்சியில் சிறுமியாக இருந்த மேரி ஈடுபட்டார்.
==கல்வி==
1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனிய பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 'டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில்' இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள் என இருந்த அக்காலத்தில் 1892-ம் ஆண்டே அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது.<ref>{{ cite web | title= Mary Engle Pennington | work=JCE Online - Journal of Chemical Education | url= http://jchemed.chem.wisc.edu/JCEWWW/features/echemists/Bios/pennington.html | accessdate= 2011-03-24 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேரி_பென்னிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது