முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
லுமும்பா [[பெல்ஜிய கொங்கோ]]வில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். [[1955]] இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக [[பெல்ஜியம்]] சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் [[ஜூலை]] [[1956]] இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை [[1958]] இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். [[டிசம்பர்]] [[1958]] இல் [[கானா]]வில் இடம்பெற்ற அனைத்து ஆபிரிக்கஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்.
 
லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடநதநடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்<ref name="speech">{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}</ref>.
 
லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் நாட்டை விட்டு வெளியேறினர்<ref name="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>.
51,711

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1069566" இருந்து மீள்விக்கப்பட்டது