பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
லுமும்பா [[பெல்ஜிய கொங்கோ]]வில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். [[1955]] இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக [[பெல்ஜியம்]] சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் [[ஜூலை]] [[1956]] இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை [[1958]] இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். [[டிசம்பர்]] [[1958]] இல் [[கானா]]வில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்கலந்து கொண்டார்.
 
லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்<ref name="speech">{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பத்திரிசு_லுமும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது