"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

994 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==வகைகள்==
கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லர் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.
 
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, [கங்கு], [கங்கம்], [கூளி], [பருந்து], [பணவை], [பாறு], [பூகம்], [வல்லூறு] என அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
 
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1070333" இருந்து மீள்விக்கப்பட்டது