காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
==வரைதல்==
[[File:Henri de Toulouse-Lautrec - Madame Palmyre with Her Dog, 1897.jpg|thumb|200px|என்றி டி டோலோசு-லோட்ரெக் என்பவரால் வரையப்பட்டு, "அவரது நாயுடன் பல்மையர் சீமாட்டி" எனத் தலைப்பிடப்பட்ட வரைதல்"]]
வரைதல் என்பது பல வகைகளாகக் காணப்படும் கருவிகள், நுட்பங்கள் என்பவற்றுள் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ பயன்படுத்திப் படிமங்களை உருவாக்கும் முறையாகும். பொதுவாக ஒரு மேற்பரப்பில் அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய கருவி ஒன்றை அம் மேற்பரப்பில் வைத்து அழுத்திக் கீறுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. வரைதல் பொதுவாகத் தாளொன்றில் கோடு கீறுவதுடனும், பரப்புக்களுக்குச் சாயை கொடுத்தலுடனும் தொடர்புள்ளது. [[காரீயம்|காரீயக்]] கோல், [[பென்சில்]], [[பேனா]]வும் [[மை]]யும், நிறப் பென்சில்கள், கரி, வண்ணப்பசை போன்றவை இத்தகைய கருவிகள். தற்காலத்தில், வரைவதற்கு, எண்மியக் கருவிகளும் பயன்படுகின்றன. பல்வேறு வகை வரைதலுக்கான மென்பொருள்களும் உள்ளன. வரைதலுக்கான நுட்பங்களில் [[கோட்டு வரைதல்]], [[கோட்டு நிரப்பல்]], குறுக்குக் கோட்டு நிரப்பல், கிறுக்கல், [[புள்ளி நிரப்பல்]] முதலியன அடங்கும். வரைதல் தொழில் புரிபவரை வரைவாளர் அல்லது வரைஞர் என அழைப்பர்.
 
 
வரைதல், குறைந்தது 16,000 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. விலங்குகளைக் காட்டும் வரைதல்களைப் பிரான்சின் லாசுகோக்சு என்னும் இடத்திலும், இசுப்பெயினின் [[ஆல்ட்டமிரா]]விலும் உள்ள பழங்கற்காலக் குகைகளில் கண்டுபிடித்துள்ளனர். [[பண்டை எகிப்து|பண்டை எகிப்தில்]], பப்பிரசுத் தாள்களில் மையினால் வரைந்த மனிதர்களைக் காட்டும் வரைதல்கள், ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் மாதிரியாகப் பயன்பட்டுள்ளன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் [[பூஞ்சாடி]]களில் வரைதல்களை வரைந்துள்ளனர்.
 
 
கிபி 15 ஆம் நூற்றாண்டளவில், கடதாசித் தாள்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிய பின்னர், ஐரோப்பாவில் [[சான்ட்ரோ பொட்டிசெல்லி]], [[ராஃபேல்]], [[மைக்கேலாஞ்செலோ]], [[லியோனார்டோ டா வின்சி]] போன்றோர் வரைதலை ஓவியத்துக்கோ சிற்பத்துக்கோ ஒர் தொடக்க கட்டமாகக் கருதாமல் அவற்றைத் தனியான ஒரு கலை வடிவமாகவே பயன்படுத்தினர்.
 
 
 
[[பகுப்பு:கலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது