காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
 
வரைதல், குறைந்தது 16,000 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. பல்வேறு வகையான விலங்குகளைக் காட்டும் வரைதல்களைப் பிரான்சின் லாசுகோக்சு என்னும் இடத்திலும், இசுப்பெயினின் [[ஆல்ட்டமிரா]]விலும் உள்ள பழங்கற்காலக் குகைகளில் கண்டுபிடித்துள்ளனர். [[பண்டை எகிப்து|பண்டை எகிப்தில்]], பப்பிரசுத் தாள்களில் மையினால் வரைந்த மனிதர்களைக் காட்டும் வரைதல்கள், ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் முதற்கட்ட மாதிரியாகப் பயன்பட்டுள்ளன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் [[பூஞ்சாடி]]களில் வரைதல்களை வரைந்துள்ளனர். இவை முதலில் வடிவவியல் கோலங்களாகவும், பின்னர் மனித உருவங்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தகைய பூஞ்சாடிகள் [[கறுப்பு உருவ மட்பாண்டம்|கறுப்பு உருவ மட்பாண்டங்கள்]] எனப்பட்டன.
 
 
கிபி 15 ஆம் நூற்றாண்டளவில், கடதாசித் தாள்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிய பின்னர், ஐரோப்பாவில் [[சான்ட்ரோ பொட்டிசெல்லி]], [[ராஃபேல்]], [[மைக்கேலாஞ்செலோ]], [[லியோனார்டோ டா வின்சி]] போன்றோர் வரைதலை ஓவியத்துக்கோ சிற்பத்துக்கோ ஒர் தொடக்கக் கட்டமாகக்கட்டமாக மட்டும் கருதாமல் அவற்றைத் தனியான ஒரு கலை வடிவமாகவே பயன்படுத்தினர். இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு இடையே சில சமயங்களில் வரைதல்கள் வரையப்பட்டன.
 
==ஓவியம்==
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது