காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
ஓவியமும் நீண்ட வரலாறு கொண்டது. பழமையான பழங்கற்காலக் குகைகளில் ஓவியங்கள் உள்ளன. தெற்கு பிரான்சில் உள்ள சோவெட், லாசுகாக்சு போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டு. [[சிவப்பு]], மண்ணிறம், [[மஞ்சள்]], [[கறுப்பு]] ஆகிய நிறங்களைக் கொண்டு குகைச் சுவர்களிலும், விதானங்களிலும் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே இவற்றின் கருப்பொருளாக உள்ளன. மனித உருவங்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் பண்டை எகிப்துக் கல்லறைகளில் காணப்படுகின்றன. [[இரண்டாம் ராம்செசு]]வின் பெரிய கோயிலில் உள்ள ஒரு ஓவியத்தில் [[ஐசிசு]]க் கடவுள், ராம்செசுவின் மனைவி அரசி நெஃபெர்த்தாரியை அழைத்துச் செல்லும் காட்சி ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. கிரேக்கர்களின் காலத்திலும், ரோமப் பேரரசுக் காலத்திலும் ஓவியங்கள் வளர்ச்சியுற்றன. இவ்விரு நாகரிகங்களும், பைசன்டைன் நாகரிகக் காலத்து ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன.
 
[[File:Picasso three musicians moma 2006.jpg|thumb|left|200px|கியூபியக் கலைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிக்காசோ வரைந்த ஓவியம். தலைப்பு: "மூன்று இசைக்கலைஞர்கள்" (Three Musicians)]]
பின்னர் மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில், 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கியோட்டோ, லியோனர்டோ டா வின்சி, ராஃபேல் போன்றோர் ஓவியக் கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். இத்தாலிய ஓவியக்கலையின் பொற்காலம் எனக் கருதப்படும் இக் காலகட்டத்தில், "கியாரோசுக்குரோ" என அழைக்கப்படும் "ஒளி-இருள்" நுட்பம் மூலம் முப்பரிமாண உணர்வைக் கொடுக்கக்கூடிய ஓவியங்கள் வரையப்பட்டன. வடக்கு ஐரோப்பிய ஓவியர்களும் இத்தாலிய ஓவியக் கலைச் செல்வாக்குக்கு உட்பட்டனர். பெல்சியத்தைச் சேர்ந்த [[சான் வான் எய்க்]], நெதர்லாந்தின் [[மூத்த பீட்டர் புரூகெல்]], செருமனியரான [[இளைய ஆன்சு ஒல்பெயின்]] என்போர் அக்காலத்தில் வெற்றிகரமான ஓவியர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் மினுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியத்துக்கு ஆழத்தையும் ஒளிர்வையும் கொடுத்தனர். 17 ஆம் நூற்றாண்டில், நெதர்லாந்தில் புகழ் வாய்ந்த ஓவியர்கள் உருவாகினர். [[ரெம்பிரான்ட்]] பைபிள் காட்சிகளுக்காகப் பெயர் பெற்று விளங்கினார், [[வெர்மீர்]] உள்ளகக் காட்சிகளை வரைவதில் சிறந்து விளங்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது