மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Shanghaiviewpic1.jpg|thumb|250px|உலகின் மிகப்பெரிய மாநகரமான சாங்காய்.]]
[[Image:Skyscrapers of Shinjuku 2009 January.jpg|thumb|right|250px|உலகின் மிகப்பெரிய மொட்ரோபோலீசான டோக்கியோ]]
'''மாநகரம்''' என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான [[குடியிருப்பு]] ஆகும்.<ref name="Goodall">Goodall, B. (1987) ''The Penguin Dictionary of Human Geography. London: Penguin.</ref><ref name="Kuper and Kuper">Kuper, A. and Kuper, J., eds (1996) ''The Social Science Encyclopedia''. 2nd edition. London: Routledge.</ref> இதை '''மாநகர்''', '''பெருநகரம்''', '''பெருநகர்''' போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய [[நகரம்|நகரமே]] பொதுவாக '''மாநகரம்''' (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக [[வரலாறு|வரலாற்று]], [[நிர்வாகம்|நிர்வாக]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டுக்]] காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
 
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான [[மசச்சூசெட்சு|மசச்சூசெட்சில்]] உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[கூட்டிணைப்பு விதி]]கள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]], சில [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளிலும் மாநகரம் என்பது [[அரச பட்டயம்|அரச பட்டயத்துடன்]] கூடிய ஒரு குடியிருப்பு ஆகும்.<ref name="Goodall"/> முற்காலத்தில் [[ஐரோப்பா]]வில் [[பேராலயம்]] ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது.
 
மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி [[நகரக்கூட்டம்]] (conurbation) எனப்படும்.
வரிசை 15:
===கோட்பாடுகள்===
====வேளாண்மை முதன்மை====
[[புதியகற்காலப் புரட்சி]]க்குப் பின்பே முதல் மாநகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது [[வேளாண்மை]] அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது.<ref>{{Harv |Bairoch|1988| pp=3–4}}</ref> வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது [[நாடோடி வாழ்க்கை]]யைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய [[பால் பைரோச்]] என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வாதித்தார்.
 
ஒரு குடியிருப்பு மாநகரம் என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அது வணிகத்தை ஆதரிப்பதற்கான மிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது [[வேரே கோர்டன் சில்டே]] என்பவரது கருத்து.<ref>{{Harv |Pacione|2001| p=16}}</ref> புதிய கற்காலத்துக்கு முன்னர், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமுதாயங்களில், பெருமளவிலான மக்கள்தொகையைத் தாங்குவதற்குத் தேவையான உணவை வழங்குவதற்கு பெரிய நிலப்பரப்புத் தேவைப்பட்டது. இது வணிக ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இயாலாததுஇயலாதது ஆக்கியிருக்கும் என்கிறார் பைரோச். இதை விளக்குவதற்கு பைரோச் ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்துள்ளார்: "மேற்கு ஐரோப்பாவில், முன்-புதியகற்காலத்தில் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 0.1 ஆக இருந்திருக்கும்".<ref name="Bairoch 1988 13">{{Harv |Bairoch|1988| p=13}}</ref> இந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கணிப்புக்கான அடிப்படையாகக் கொண்டும், உணவு உற்பத்தியில் 10% வணிகத்துக்காக உபரியாக இருக்கும், மாநகரக் குடிமக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை என்னும் கருதுகோள்களின் அடிப்படையிலும், பின்வருமாறு கணிப்பிட்டார். "1000 பேரைக்கொண்ட ஒரு மாநகரைப் பேணுவதற்கு, போக்குவரத்துச் செலவைக் கருத்தில் கொள்ளாமல், 100,000 [[சதுர கிலோமீட்டர்]] நிலப்பரப்புத் தேவைப்பட்டிருக்கும். போக்குவரத்துச் செலவையும் எடுத்துக்கொண்டால் தேவையான நிலப்பரப்பு 200,000 சதுர கிலோமீட்டர் ஆக இருக்கும்......".<ref name="Bairoch 1988 13"/> இது ஏறத்தாழ [[பெரிய பிரித்தானியா]]வின் பரப்பளவுக்கு ஈடானது என்று பைரோச் எடுத்துக் காட்டினார்.
 
===நகர்ப்புற முதன்மை===
யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால்,<ref name="Jacobs 1969 23">{{Harv |Jacobs|1969| p=23}}</ref> இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்குவதுடன் வணிகமும் விரிவடையும்.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது