வெட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Ixora
No edit summary
வரிசை 26:
 
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் [[பொன்சாய்]] செய்கைக்கு ஏற்றது.
==சங்கநூல் செய்திகள்==
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி. குறிஞ்சிப்பாட்டு 63
வெண்ணிற வெட்சி
வெட்சி மலர் வெள்ளை நிறத்தில் ஊசிபோல் பூக்கும். அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான். உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5
செந்நிற வெட்சி
முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது. செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21
காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும். இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14
வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர். புறநானூறு 202-1
வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர். ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22
ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து. புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2
வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை. தொல்காப்பியம் 3-59-3
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது