வெட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் [[பொன்சாய்]] செய்கைக்கு ஏற்றது.
==சங்கநூல் செய்திகள்==
[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF வெட்சி] என்பது ஒருவகைக் காட்டுப்பூ. <br />
இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. <br />
இது ஊசி போல் அரும்பு விடும். <br />
வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. <br />
செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.
* குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி. <ref>குறிஞ்சிப்பாட்டு 63</ref>
* வெண்ணிற வெட்சி
:வெட்சி மலர் வெள்ளை நிறத்தில் ஊசிபோல் பூக்கும். அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான். <ref>உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5</ref>
*செந்நிற வெட்சி
:முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது. <ref>செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21</ref>
* காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும். <ref>இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14</ref>
* வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர். <ref>புறநானூறு 202-1</ref>
* வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர். <ref>ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22</ref>
* ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து. <ref>புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2</ref>
* வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை. <ref>தொல்காப்பியம் 3-59-3</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது