மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 20:
===நகர்ப்புற முதன்மை===
யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால்,<ref name="Jacobs 1969 23">{{Harv |Jacobs|1969| p=23}}</ref> இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும்
==உருவானதற்கான காரணங்கள்==
மக்கள் ஏன் தொடக்கத்தில் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து அடர்த்தியாக வாழத் தலைப்பட்டனர் என்பதற்கு, கோட்பாட்டாளர்கள் பலவகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். [[பிரெண்டன் ஓ'பிளகேர்ட்டி]] என்பவர் தான் எழுதிய ''நகரப் பொருளியல்'' ''(City Economics)'' என்னும் நூலில், "அவற்றினது சாதகத் தன்மைகள், பாதகத் தன்மைகளைவிடக் கூடுதலாக இருந்தால் மட்டுமே, பல ஆயிரம் ஆண்டுகள் இருந்ததைப்போல, நகரங்கள் நிலைத்திருக்கும்" என்றார்<ref>O'Flaherty 2005</ref>. ஓ'பிளகேர்ட்டி, கவரத்தக்க இரண்டு சாதக நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஒன்று, economies of scale மற்றது, [[உயரும் விகித அளவு விளைவு]] (increasing returns to scale). இக்கருத்துருக்கள் பொதுவாக நிறுவனங்களுடன் தொடர்புள்ளவை. எனினும், மிக அடிப்படையான பொருளாதார முறைமைகளில் கூட இவற்றின் பயன்பாட்டைக் காணலாம். எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காகக் கூட்டும்போது, விளைவு இரண்டு மடங்குக்கும் மேலாகக் கூடுமானால் அங்கே "உயரும் விகித அளவு விளைவு ஏற்படுவதாகக் கூறலாம். அதே வேளை விளைவு இரண்டு மடங்காகும்போது செலவு இரண்டு மடங்கிலும் குறைவாக இருக்குமானால் அந்நடவடிக்கை economies of scale ஐக் கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும்<ref>O'Flaherty 2005, pp. 572–573</ref>. இந்தக் கருத்துருக்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதற்காக, ஓ'பிளகேர்ட்டி, நகரங்கள் உருவானதற்கான மிகப் பழைய காரணங்களுள் ஒன்றான "பாதுகாப்பு" என்பதைப் பயன்படுத்துகிறார். இந்த எடுத்துக்காட்டில், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவும் எதுவும் (எகா. மதில் சுவர்) உள்ளீடு ஆகும். பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், அங்கேயுள்ள பெறுமதியானவை அனைத்தும் ஒருங்கே "விளைவு" என்பதற்குள் அடங்கும்.
==குறிப்புகள்==
|