"மின் விளக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,400 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
rv.
(rv.)
[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
 
==வரலாறு==
==
மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே [[ஹம்பிரி டேவி]] என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், [[மின் முனை|மின் முனைகள்]] மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. [[ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல்]] என்பவர், மின்சாரம் ஒரு [[மின்தடை|மின்தடையுள்ள]] கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் [[வெப்பம்|வெப்பசக்தி]] மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான [[நுண்ணிழை|நுண்ணிழைகளைச்]] செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த [[சேர் ஜோசப் வில்சன் ஸ்வான்]] என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய [[வெற்றிடம்|வெற்றிடத்தை]] நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் [[காபன்]] நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை [[தொமஸ் அல்வா எடிசன்|தொமஸ் அல்வா எடிசனுக்குக்]] கிடைத்தது.
 
==மின் விளக்கின் வகைகள்==
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு:
 
* [[வெள்ளொளிர்வு விளக்கு]] (Incandescent Lamp)
* [[உடனொளிர்வு விளக்கு]] (Fluorescent Lamp)
* [[உலோக ஹேலைட்டு விளக்கு]] (Metal Halide Lamp)
* [[தங்ஸ்தன் - அலசன் விளக்கு]] (Tungstan-Halagen Lamp)
* [[பாதரச ஆவி விளக்கு]] (Mercury Vapour Lamp)
* [[சோடியம் ஆவி விளக்கு]] (Sodium Vapour Lamp)
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஒளியமைப்பு]]
* [[இழை ஒளியியல் ஒளியமைப்பு]] (Fiber Optic Lighting)
* [[ஒளியுமிழும் இருமுனையங்கள்]] (Light Emiting Diodes)
 
[[பகுப்பு:ஒளியமைப்பு]]
[[பகுப்பு:மின் உறுப்புகள்]]
[[பகுப்பு:விளக்குகள்]]
 
[[ar:مصباح كهربائي]]
[[da:Lampe (elektrisk)]]
[[en:Lamp (electrical component)]]
[[es:Lámpara eléctrica]]
[[fa:لامپ]]
[[fr:Lampe électrique]]
[[ja:ランプ (光源)]]
[[ko:전등]]
[[lt:Elektros lemputė]]
[[mr:विजेचा दिवा]]
[[mzn:لامپ]]
[[nl:Lamp]]
[[simple:Lamp]]
[[zh:电灯]]
23

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1072663" இருந்து மீள்விக்கப்பட்டது