வட்டக்கோணப்பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Circle arc.svg|thumb|300px|ஒரு வட்டக்கோணப்பகுதி (பச்சை வண்ணம்)]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] ஒரு '''வட்டக்கோணப்பகுதி''' அல்லது '''ஆரைத்துண்டு''' (''circular sector'') என்பது ஒரு [[வட்டம்|வட்ட வடிவ]] தகட்டின் இரு [[ஆரம்|ஆரங்கள்]] மற்றும் அவ்வட்டத்தகட்டின் ஒரு [[வட்டவில்|வில்]] ஆகியவற்றால் அடைபெறும் வடிவமாகும். ஒரு வட்டத் தகடு இரு துண்டுகளாகப் பிரிக்கப்படும் பொழுது பெரிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி பெரிய வட்டக்கோணப்பகுதி என்றும் சிறிய வட்டவில்லால் அடைபெறும் பகுதி சிறிய வட்டக்கோணப்பகுதி என்றும் அழைக்கப்படுகின்றன. படத்தில், θ மையக்கோணம் ([[ரேடியன்|ரேடியன்களில்]]), <math>r</math> வட்டத்தின் ஆரம், <math>L</math> சிறிய வட்டவில்லின் நீளம்.
 
180° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப்பகுதி அரைவட்டம், 90° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி காற்பகுதி (quadrants), 60° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி அறுபகுதி (sextant) மற்றும் 45° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதி எண்பகுதி (octant) என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வட்டக்கோணப்பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது