மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
[[File:Sunset over florence 1.jpg|thumb|250px|[[புளோரன்சு]], [[இத்தாலி]]]]
[[File:ChacaoAltamiraView2004-8.jpg|thumb|250px|[[கராகாசு]], [[வெனசுவேலா]]]]
[[File:PanoramaTour ParisEiffel, DecemberÉcole 2007militaire, Champ-de-Mars, Palais de Chaillot, La Défense - 01.jpg|thumb|250px|[[பாரிசு]], [[பிரான்சு]]]]
முதல் மாநகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாநகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
 
வரிசை 20:
 
===நகர்ப்புற முதன்மை===
யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால்,<ref name="Jacobs 1969 23">{{Harv |Jacobs|1969| p=23}}</ref> இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி வணிகத்தையும் விரிவடையச் செய்வதால் மேலும் பலர் அவ்விடத்தை நோக்கி வருவர். இவ்வாறு விற்பனையாகும் பண்டங்களுள் பல்வேறு வகையான விதைகளும் இருக்கும். இவ்விதைகள் பல வழிகளில், சில சமயம் எதிர்பாராத விதமாகவும், விதைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தியளவு கவனிக்கப்படும். காட்டுப் பயிராகத் தானே வளரும்போது கவனிப்பதை விட இது இலகுவாக இருக்கும். இது நல்ல விதைகளைத் தேர்வு செய்து விற்பனை செய்வதற்கும் வழி வகுக்கும்.
 
==உருவானதற்கான காரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது