மாபூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
rm copyvio text
வரிசை 17:
}}
'''மாபூமி''' ([[தெலுங்கு]]: మా భూమి, எங்கள் நிலம்) [[தெலுங்கானா]]வை மையமாக வைத்து [[1979]] ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதியாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் [[1945]] முதல் [[1951]] வரை ஆகும்.
 
==வரலாற்றுச் சூழல்==
மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக விவசாயிகளைக் கொண்ட தெலுங்கானாவில், விவசாயிகள் கூலிகளாகவும், அடிமைகளாகவுமே நிலப்பிரபுக்களின் கீழ் வாழ்ந்து வந்தனர். பெரும் நிலச்சுவன்தார்கள் சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் ஏக்கர்கள் வரை தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். ஆளும் அரசு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. நிலச்சுவன்தார்களின் அடியாட்களான ரஜாக்கர்கள் எனும் ரவுடிகளும் மக்களை கொடுமைப்படுத்தி வந்த்னார்.
 
==ராமையா ==
அப்படியிருந்த தெலுங்கானா பகுதியில் உள்ள நல்கொண்ட மாவட்டத்தில் சிரிபுரம் எனும் ஊரில் இருக்கும் ஒரு ஏழை விவசாயியான வீரைய்யா, அவன் மகன் ராமையா இவர்களிடமிருந்து கதை தொடங்குகிறது. ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வும் அதன் குறியீடும்தான் இந்த ராமைய்யா. வளர் இளம்பருவத்தில் அவனை அந்த ஊர் ஜமீன்தாரின் வீட்டில் வேலையாளாக இழுத்து சென்றுவிடுகிறார்கள் ரஜாக்கர்கள். ராமையா சிறுவனாக, ஆடிப்பாடி விளையாடி கல்வி கற்க வேண்டிய வயதில் எருமைத் தொழுவத்தில் கடுமையாக வேலைகள் செய்வதிலிருந்து படம் தொடங்குகிறது.
 
அந்த ஊரில் மொத்த நிலங்களையும் வைத்திருக்கும் ஜமீன்தார் வைத்தது தான் சட்டம். ஊர் மக்கள் அவருக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். சிறு வயது முதலே அவர் கொடுக்கும் சிறு கூலிக்கு வேலை செய்ய வேண்டும். மீறினால் அவரின் அடியாள் படை அடிக்கும், திமிறினால் கொன்றுவிடும். ராமையா அந்தச் சூழலில் வளருகிறான். சமூகம் புரிய ஆரம்பிக்கிறது, தன் சூழலில் இயல்பான கோபக்கார இளைஞனாக மாறுகிறான். கோபம்தான் வருகிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் தாழ்த்தப்பட்ட தலித் வேறு.
 
சந்திரி எனும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த ஊரில் பெண்கள் நிலைமையோ மிகக் கொடுமையாக இருக்கிறது. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கச் செல்ல வேண்டுமென்றால் கூட அந்தப் பெண் ஜமீன்தாரின் அடியாளிடம் தன் மார்பைக் கசக்கி பால் பிழிந்து காண்பித்தால்தான் அனுமதி. வயதுக்கு வந்த பெண்கள் ஜமீன்தாரின் படுக்கைக்கும், நிஜாமின் அதிகாரிகளுக்கும் விருந்தாக வேண்டும். சமூகக் கைதியாக போராட முடியாமல் எல்லாப் பெண்களையும் போல் சந்திரியும் ஜமீன்தாரின் படுக்கைக்குச் செல்ல, ராமைய்யா கோபம் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஊரை விட்டே செல்கிறான். பல இன்னல்கள் தாண்டி ஐதரபாதில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேருகிறான்.
 
==சங்கமும் போராட்டமும்==
எந்த சாதியாக இருந்தாலும் கூலி விவசாயிக்கு வரும் பிரச்சனை ஒன்று தான். ஜமீன்தாரின் கொடுமை, அடியாட்களான ரஜாக்கர்களின் கொடுமை, கையில் பணமில்லை, பசி அவர்களை ஒன்றாகத் திரட்டுகிறது. பல கோபக்கார இளைஞர்கள் போராடுகிறார்கள். சிறு சண்டைகள் உடனடி தீர்வுகளை தருகின்றன. அது பின்னர் போராட்டமாகவும், சங்கமாகவும் விரிகிறது.
 
ஒரு நிலத்தில் அறுவடை சமயத்தில் கூலி விவசாயிகளை ஜமீன்தாரின் ஆட்கள் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். விவசாயிகள் சாதியை மீறி ஒன்று திரண்டு அடியாட்களை அடித்துத் துரத்துகிறார்கள். அந்த நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள். தங்கள் கண் முன் தங்களின் ஒற்றுமையின் பலம் தெரிய சாதியை விடுத்து ஊர் முழுவதும் சங்கமாக சேருகிறார்கள். இப்படிப் பல சங்கங்கள் ஒன்றிணைகின்றன.
 
மக்கள் திரளாக போராடுகிறார்கள். அவர்கள் இவர்களுக்கு உதவுவது என பாட்டாளி சங்கங்கள் கிராமம் கிராமமாக ஒன்றிணைகின்றன. அனைவரின் எதிரி ஒருவன்தான் எனும் போது எதிரியை எதிர்த்துப் பிரிந்து போராடினால் தோல்விதான் வரும். சேர்ந்து எதிர்த்தால் வெற்றி வரும். மனித சமூகம் ஆதியில் கற்ற பாடம்தான், சில நாட்கள் மறந்து போயிருந்தது, மீண்டும் இந்த விவசாயிகளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
 
விவசாயிகளின் எழுச்சி நிஜாமை கோபப்படுத்துகிறது. நிஜாமின் போலிஸும் ராணுவமும் சங்க ஆட்களை நோக்கி இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைகிறார்கள். மக்கள் அதன் தொடர்ச்சியாக ஆயுதத்தை கையிலெடுக்கிறார்கள். மக்களே தடிகளையும், கட்டைகளையும் கொண்டு எதிர்க்கிறார்கள். கைப்பற்றும் துப்பாக்கிகளை உபயோகிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இயல்பான மக்கள் திரள், தம்மை காப்பாற்றிக்கொள்ள உயர்ந்த கலக வடிவமான ஆயுதப் போராடத்தைத் தொடுக்கிறார்கள்.
 
ராமையா ஊருக்கு திரும்பும் நேரம் அதுதான். ஆண்கள் முதல் பெண்கள் வரை கையில் துப்பாக்கியேந்தி போராடிக் கொண்டிருக்கும் நேரம். பல ஊர்களில் இருந்து ஜமீன்தார்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். நிலங்கள் மக்களால் கைப்பற்றப்பட்டு சங்கத்தால் மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
 
அவ்வாறே ராமய்யாவும் சொந்த ஊர் சங்கத்தில் ஈடுபட்டு புரட்சிக்கு வேலை செய்கிறான். நகரத்தில் கற்றிருந்த போராட்ட முறைகள் அவனுக்கு உதவுகின்றன. தங்கள் ஊரில் உள்ள ஜமீன்தாரைத் தாக்கி அவரின் வீட்டையும் நிலத்தையும் கைப்பற்றுகிறார்கள். சங்கம் நிலத்தை பங்கிடுகிறது. ஊருக்கே பங்கிடும் ராமையாவிடம் அவன் அப்பா ஏக்கமாக கொஞ்சம் நிலத்தை கேட்கிறார். நமக்கு கடைசியில் தான் என்கிறான் ராமைய்யா, ஆனால் சங்கத்தின் தலைவர் ராமையாவின் அப்பாவிற்குநிலத்தை சரியாக பகிர்ந்து தருகிறார். இத்தனை நாள் அடிமையாக இருந்த அவர் முதல் முறை சொத்தாகக் கிடைத்த தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாபூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது