"புனித வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

534 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (r2.7.1) (தானியங்கிஅழிப்பு: et:Suur reede)
சி (சேர்க்கை)
==விவிலிய ஆதாரங்கள்==
 
[[இயேசு]] மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் இறந்தார்]] என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை [[நற்செய்தி]] நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:
*[[மத்தேயு|மத்தேயு நற்செய்தி 26:36-75; 27:1-61]]
*[[மாற்கு|மாற்கு நற்செய்தி 14:32-72; 15:1-47]]
==விவிலிய உரைக்கூற்றுகளின்படி இயேசுவின் துன்பமும் சிலுவைச் சாவும்==
நற்செய்திச் சான்றுப்படி, [[எருசலேம்]] கோவில் காவலர்களும் யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவை கெத்சமனி தோட்டத்தில் கைதுசெய்தார்கள். இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளைக் கூலியாகப் பெற்றிருந்தார். கைதுசெய்யப்பட்ட [[இயேசு|இயேசுவை]] முதலில் அன்னாஸ் என்பவரின் முன் கொண்டு சென்றார்கள். இவர் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவரின் மாமனார். பின் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார்.
 
இயேசுவுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இயேசு எருசலேம் கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி எழுப்புவதாகக் கூறினார் என்றொரு குற்றச்சாட்டு. அவர் தம்மைக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு.
அப்போது தலைமைக் குரு இயேசுவை நோக்கி, "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்" என்று பதிலிறுக்கவே தலைமைக் குரு இயேசு கடவுளைப் பழித்ததாகக் கூறினார். உடனே, கூடியிருந்த மக்கள் "இவன் சாக வேண்டியவன்" என்று பதிலிறுத்தார்கள்.
 
இதற்கிடையில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் ஓடிவிட்டார்கள். தலைமைச் சீடராய் இருந்த [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] கூட "இயேசுவை அறியேன்" என்று கூறி மும்முறை மறுதலித்தார். ஆயினும் பின்னர், தாம் இவ்வாறு கோழையாக நடந்து கொண்டதற்காகவும் தம் குருவும் ஆண்டவருமான [[இயேசு|இயேசுவை]] மறுதலித்ததற்காகவும் மனம் நொந்து அழுதார்.
 
பின்னர்அதன்பின், இயேசுவை உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்து என்பவரின் முன் கொண்டுசென்றார்கள். பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, அவரிடத்தில் யாதொரு குற்றமும் இல்லை என்று மக்கள் கூட்டத்திடம் சொல்லிப் பார்த்தார். இயேசு கலிலேயப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்து பிலாத்து அவரைக் கலிலேயாவை ஆண்ட ஏரோதிடம் அனுப்பினார். யூதர்களின் பாஸ்கு விழாவுக்காக ஏரோது எருசலேமில் இருந்தார். ஏரோது கேட்ட கேள்விகளுக்கு [[இயேசு]] பதில் ஒன்றும் தராமல் அமைதி காத்தார்.
 
பின்னர் பிலாத்து இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலை செய்ய முனைந்தார். ஆனால் மக்களோ இயேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றும், பரபா என்னும் குற்றவாளியை விடுதலை செய்யவும் கூறினார்கள். இயேசுவை என்ன செய்யவேண்டும் என்று பிலாத்து கேட்டதற்கு மக்கள், "சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்தினார்கள்.
 
*யோவான் 19:28-29
{{cquote|28 இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
 
29 அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.}}
 
*யோவான் 19:30
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
 
கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது.:
 
மிகப் பழைமையான வழ்க்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்:
 
==பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை நிகழ்வு==
[[படிமம்:Archbishop Michael Augustine during Good Friday in way of Cross.JPG|thumb|200px|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர், மேதகு. மிகேல்மிக்கேல் அகுஸ்தீன் ஆண்டகை புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை செய்யும் காட்சி]]
{{Main|சிலுவைப் பாதை}}
 
பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. ஏனென்றால் [[இயேசு]] அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது.
 
உரோமையில் திருத்தந்தை நிகழ்த்தும் சிலுவைப் பாதை தொலைக்காட்சி வழியாக உலக மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. முன்னாளைய திருத்தந்தையர்களாகிய [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல் (சின்னப்பர்)]], மற்றும் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்)]] ஆகியோர் தாமாகவே சிலுவையைச் சுமந்துகொண்டு, உரோமையில் அமைந்துள்ள முன்னாளைய கேளிக்கை அரங்கமாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் களமாக மாறிய [[கொலோசியம், ரோம்|கொலொசேயம்]] என்னும் இடத்தில் சிலுவைப் பாதை ஆண்டுதோறும் நிகழ்த்துவது வழக்கம். அவர்களைத் தொடர்ந்து, [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும்]] அங்கு சிலுவைப் பாதை நிகழ்த்தியுள்ளார். 2011ஆம் ஆண்டிலும் பெரிய வெள்ளியன்று (ஏப்ரல் 22) சிலுவைப் பாதையை நிகழ்த்துகிறார்நிகழ்த்தினார்<ref>[http://www.vatican.va/news_services/liturgy/2011/documents/ns_lit_doc_20110422_via-crucis-present_en.html பதினாறாம் பெனடிக்ட் நிகழ்த்தும் சிலுவைப் பாதை]</ref>.
 
2012ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் பெரிய வெள்ளி ஆகும்.
 
==மேலும் காண்க==
[[தவக் காலம்]]
<br>[[பெரிய வியாழன்]]
<br>[[சிலுவைப் பாதை]]
<br>[[விவிலிய சிலுவைப் பாதை]]
==ஆதாரங்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1079144" இருந்து மீள்விக்கப்பட்டது