"தென்சீனக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,977 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎புவியியல்: *விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
சி (→‎புவியியல்: *விரிவாக்கம்*)
 
இந்தக் கடலில் விழும் பெரும் ஆறுகள்: பவழ ஆறு , மின் ஆறு, ஜியுலொங் ஆறு, சிவப்பு ஆறு, [[மேக்கொங் ஆறு|மேக்கொங்]], ரஜங் ஆறு, பகாங் ஆறு, பம்பங்கா ஆறு, மற்றும் பாசிக் ஆறு.
== வளங்கள் ==
இந்த கடல்பகுதி உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர்ப்பகுதியாகும். உலகின் இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் கடல் வழி ஆகும். உலகின் வருடாந்திர வணிக கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 50%க்கும் மேலான எடையளவு மலாக்கா நீரிணை, சுந்தா நீரிணை மற்றும் லோம்பொக் நீரிணைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒருநாளைக்கு 1.6 மில்லியன் க.மீ (10 மில்லியன் பீப்பாய்கள்) [[பாறை எண்ணெய்|பெட்ரோலியம்]] எடுத்துச் செல்லப்படுகிறது. அடிக்கடி கடற்கொள்ளை நிகழ்வுகள் பதியப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டின் நடுக்காலங்களில் இருந்ததைவிட குறைந்துள்ளது.
 
இந்தப் பகுதியில் உறுதிசெய்யப்பட்ட பாறை எண்ணெய் இருப்பு ஏறத்தாழ 1.2 கன கி.மீ (7.7 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும், மொத்தம் மதிப்பிடப்பட்ட இருப்பு 4.5 கன கி.மீ (28 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும் உள்ளது. [[இயற்கை எரிவளி]] வளங்கள் மொத்தம் 7,500 கன கி.மீ (266 டிரில்லியன் கன அடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.
 
== மேலும் பார்க்க ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082269" இருந்து மீள்விக்கப்பட்டது