"பச்சைக் குக்குறுவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
மேலும் சில தகவல்கள் - முந்தைய தகவல்கள் சற்று மாற்றியமைக்கப் பட்டுள்ளன
(மேலும் சில தகவல்கள் - முந்தைய தகவல்கள் சற்று மாற்றியமைக்கப் பட்டுள்ளன)
}}
 
'''பச்சைக் குக்குறுவான்''' (Brown-headed Barbet) என்பது ஒரு ஆசிய குக்குருவான் பறவை ஆகும். குக்குறுவான் மற்றும் [[தூக்கான் பறவை]] என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன. குக்குருவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை.
 
==கள இயல்புகள்==
இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றன. இது ஒரு தோட்டம் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பூச்சிகளையும் பழங்களையும் உணவாக்க் கொண்டு மரங்களில் வாழும் ஓர் இனமாகும். இது மரப் பொந்துகளில் கூடு அமைத்து 2-4 முட்டைகளை இடுகின்றது. பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை போன்ற பழங்களை விரும்பி உண்ணும். பெரும் காடுகளைத் தவிர்த்து நகர் மற்றும் கிராம தோட்டங்களில் இவை வாழ்கின்றன. பொருத்தமாக மர பொந்துகளில் கூடு அமைக்கும் இவை, ஆணும் பெண்ணுமாக அடை காக்கும். தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும் <ref> [http://commons.wikimedia.org/wiki/File:Brown_headed_Barbet_I2_IMG_8449.jpg] பரத்பூரில் ஜே.எம். கார்கு எடுத்த படம்</ref>. கண்ணைச் சுற்றி இருக்கும் செம்மஞ்சள் வட்டம் அலகின் அடிவரை செல்லும் <ref> சலீம் அலி - தி புக் ஆவ் இந்தியன் பேட்சு - பக். 41 & 194 (13வது பதிப்பு)</ref>.
 
==பரவல்==
பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் காணப்படுகின்றன(''M. z. zeylanica, M. z. caniceps, M. z. inornata''<ref> Pocket Guide to the Birds of the Indian Subcontinent - Richard Grimmett, Carol and Tim Inskipp - p. 52 </ref>).
இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன. இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது <ref> சலீம் அலி - தி புக் ஆவ் இந்தியன் பேட்சு - பக். 41 & 194 (13வது பதிப்பு)</ref>.
 
==உணவு==
பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை, பப்பாளி<ref> orientalbirdimages.org [http://orientalbirdimages.org/birdimages.php?p=20&action=birdspecies&Bird_ID=295&Bird_Family_ID=&pagesize=1] </ref> போன்ற பழங்களை விரும்பி உண்ணும். இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றன. பொருத்தமாக மர பொந்துகளில் கூடு அமைக்கும் இவை, ஆணும் பெண்ணுமாக அடை காக்கும். தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
 
கிட்டத்தட்ட பெரிய பறவைகளான இவற்றில் ஒன்று 27 செ.மீ உடையது. கொழுத்த இப்பறவை குறுகிய கழுத்தையும், பெரிய தலையையும், குறுகிய வாலையும் உடையது.
 
வளர்ந்த பறவை பழுப்பு நிறத்தை தலையிலும் கழுத்திலும் நெஞ்சிலும் கொண்டும், கண்ணைச் சுற்றி மஞ்சல் நிறத்துடனும் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. அலகு தடிப்பாகவும் சிவப்பாகவும் காணப்படும். ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புக்கள்==
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082484" இருந்து மீள்விக்கப்பட்டது