உள்ளீடு/வெளியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உள்ளீடு/வெளியீடு''' அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:18, 8 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

உள்ளீடு/வெளியீடு அல்லது உ/வெ (ஆங்கிலம்: I/O) என்பது கணித்தலில் தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் (கணினி போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். உள்ளீடுகள் என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், வெளியீடுகள் என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, விசைப்பலகை, சுட்டி ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான இணக்கி, பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளீடு/வெளியீடு&oldid=1082857" இலிருந்து மீள்விக்கப்பட்டது