உள்ளீடு/வெளியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உள்ளீடு/வெளியீடு''' அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''உள்ளீடு/வெளியீடு''' அல்லது '''உ/வெ''' (''ஆங்கிலம்: '''I/O''''') என்பது கணித்தலில் தகவல் [[மையச் செயற்பகுதி]] முறைமைக்கும் ([[கணினி]] போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். [[உள்ளீடுகள்]] என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், [[வெளியீடுகள்]] என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, [[விசைப்பலகை]], [[சுட்டி]] ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், [[காட்சித்திரை]], [[கணினி அச்சுப்பொறி]] ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான [[இணக்கி]], [[பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்]] ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன.
 
[[பகுப்பு:கணினியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உள்ளீடு/வெளியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது