"மகாசேனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

530 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மகாசேனன்''' (பொ.பி. 277 - 304) என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
==சங்கமித்ரர்==
[[சங்கமித்ரர்]] என்பவர் [[மகாயான பௌத்தம்]] என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். [[இலங்கை]]யைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து [[தேரவாத பௌத்தம்]] பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் [[இலங்கை]]யில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் [[சங்கமித்ரர்]] கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான [[முதலாம் சேட்டதிச்சன்]] [[இலங்கை]]க்கு அரசனானான். அதனால் மித்ரர் சேட்டனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் [[சங்கமித்ரர்]] மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
==சைவத்துக்கு எதிரி==
இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான்.
 
==மூலநூல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1083185" இருந்து மீள்விக்கப்பட்டது