"ஐபிஎம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,552 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:IBM)
 
== வரலாறு ==
ஐ பி எம் நிறுவனத்தின் வரலாறு 1885 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. 1885 ஆம் ஆண்டு ஜூலியஸ் இ.பிட்ராப் என்பவர் கணினி அளவி என்னும் சாதனத்திற்கு காப்புரிமையை பதிவு செய்தார். அதன் பின் அலக்ஸாண்டர் டை என்பவர் சுழல் பதிவு கருவியை காப்புரிமை பதிவு செய்தார்.(1888 ஆம் ஆண்டு).1889 ஆம் ஆண்டு ஹெர்மன் ஹோலேரித் என்பவருக்கு மின்பட்டியல் சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.வில்லியர்ட் பண்டி தொழிலாளர்கள் வருகைப் பதிவை பதிவு செய்யும் கருவியை கண்டுபிடித்தார்.1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினாறாம் நாள் மேற்க்கண்ட கண்டுபிடிப்பாளர்களை சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் என்பவர் ஒன்றிணைத்து கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்) என்ற பெயரில் நிறுவினார்.[[நியூயார்க்]] மாகாணத்தை அடிப்படையாக கொண்டிருந்த இந்நிறுவனத்திற்கு அப்போது சுமார் 1300 பணியாளர்கள் இருந்தனர்.நியூயார்க், ஓஹியோ,டேய்டன்,டெட்ராய்ட்,வாஷிங்டன் டி சி,மற்றும் கனடாவின் டொராண்டோ,ஆண்ட்ரியோ முதலிய இடங்களில் ஆலைகளும் அலுவலகங்களும் இயங்கின.வணிக ரீதியான அளவீட்டுக்கருவிகள் முதல் நேரப் பதிவுகருவிகள்,பட்டியல் தயாரிக்கும் சாதனங்கள்,மற்றும் துளையிடப்பட்ட அட்டைகள் முதலியவற்றை தயாரித்து விற்பனை செய்தது.
*[[1911]]ஆம் ஆண்டு ''கொம்ப்யூட்டிங்-டாபுலேட்டிங்-ரெகார்டிங் கொம்பனி (சி-டி-ஆர்)'' (Computing-Tabulating-Recording Company) என்ற பெயரிலே துவங்கிய இந்நிறுவனம் ''தொமஸ்.ஜெ.வாட்ஸன் சீனியர்'' என்பவரது திறமையால் மிகுந்த வளர்ச்சியடைந்தது.
*[[1924]]ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்' ('''ஐபிஎம்''') என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் ,தேசிய நிதி பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் என்பவரை தமது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்க வருமாறு பணித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் இந்த CTR நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பணியாளர்களுக்கு உபகாரச் சம்பளம், வாடிக்கையாளர்களுக்கு குறித்த சேவை முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.கம்பெனியின் பெருமையையும்,விசுவாசத்தையும் ஒவ்வொரு பணியாளர் மனதிலும் விதைத்தார்.இவர் அறிமுகப் படுத்திய தின்க் ( THINK - யோசிப்போம் அல்லது யோசி) என்னும் ஸ்லோகன் பணியாளர்கள் மத்தியில் மந்திர வார்த்தையாக ஆனது. இவர் பொறுப்பேற்ற பதினோரே மாதங்களில் இந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார்.இவரது முதல் நான்கு வருட பணிக்காலத்தில் இந்நிறுவனம் சுமார் 9மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனை ஈட்டியது.மேலும் இந்நிறுவனம் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா,ஆசியா முதலிய கண்டங்களில் தனது இயக்கத்தை நீட்டித்தது.பிப்ரவரி 14 ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் [[ஐ பி எம்]] கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.
 
== ஐபிஎமின் பல்வேறு அலுவலகங்கள் ==
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1085172" இருந்து மீள்விக்கப்பட்டது