புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புனைகதை''' அல்லது '''புனைவு''' என்பது, உண்மை அல்லாத [[கதை]]களைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் [[கற்பனை]]யாக உருவாக்கப்படுபவை. எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான [[மனிதர்]]கள், [[இடம்|இடங்கள்]], [[நிகழ்வு]]கள் என்பன இடம் பெறுவதுண்டு. எல்லாப் புனைகதைகளும் கலைத்துவம் கொண்டவையாக இருப்பதில்லை எனினும், புனைகதை என்பது ஒரு கலை வடிவமாக அல்லது [[பொழுதுபோக்கு]] வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.
 
==புனைகதையின் வகைகள்==
===நடப்பியல் சார்ந்த புனைகதைகள்===
நடப்பியல் சார்ந்த புனைகதைகள் கற்பனையானவை எனினும் உண்மையாக நடக்கக்கூடியவை. அவற்றில் இடம்பெறும் நிகழ்வுகள், இடங்கள், மனிதர்கள் போன்றவை உண்மையானவையாகவே இருக்கவும் கூடும். உண்மைசார்ந்த புனைகதைகள், அதனை வாசிப்பவர்கள் தாம் உண்மையான நிகழ்வுகளையே வாசிப்பதான உணர்வைப் பெற வைப்பன.
 
===நடப்பியல் சாராத புனைகதைகள்===
நடப்பியல் சாராத புனைகதைகளில் இடபெறும் நிகழ்வுகள், அல்லது பாத்திரங்கள் நடப்பியல் வாழ்க்கையில் இடம்பெற முடியாதவையாக இருக்கும். இவை மனித வரலாற்றின் அனுபவங்களுக்குப் புறம்பானவையாக அல்லது இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வரம்புக்குள் அடங்காதவையாக இருக்கும். தேவதைக் கதைகள், மாய மந்திரக் கதைகள் போன்றவை இந்தப் புனைகளை வகுப்புக்குள் அடங்குபவை.
 
===அரைப் புனைகதைகள்===
இவை பெருமளவு உண்மைக் கூறுகளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள், புனைவாக்கம் செய்யப்பட்ட உண்மைக் கதைகள், மீட்டுருவாக்கிய வரலாறுகள் என்பன புனைகதையின் இவ்வகைக்குள் அடங்குவன.
 
[[பகுப்பு:புனைவு]]
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது