புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
புனைகதை [[கருப்பொருள்]], [[கதைமாந்தர்]], [[பகைப்புலம்]] என்னும் மூன்று முக்கியமான கூறுகளைக் கொண்டது என்பது மோரெல் என்பாரின் கருத்து.<ref>{{Harvard citation | Morrell | 2006 | p = 151}}</ref> புதினம் எழுதுவதற்கான எழுத்தாளரின் சுருக்கத்தொகுப்புக் கையேடு (Writer's Digest Handbook of Novel Writing) என்னும் நூல், கருப்பொருள், கதைமாந்தர், [[முரண்பாடு (எழுத்து)|முரண்பாடு]], பகைப்புலம், [[உரையாடல் (எழுத்து)|உரையாடல்]] போன்றவற்றைப் புனைகதையின் கூறுகளாகக் கொள்கிறது.<ref>{{Harvard citation | Writer's Digest Handbook of Novel Writing | 1992 | p = 160}}</ref> பெல் என்பவர், எழுத்தாளர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புனைகதை ஒன்றின் கருப்பொருளுக்குச் சேர்க்கப்பட வேண்டியவையாகக் கதைமாந்தர், பகைப்புலம், உரையாடல் என்பவற்றைக் குறிப்பிடுகிறார்.<ref>{{Harvard citation | Bell | 2004 |p = 16}}</ref> கதைமாந்தர், செயல், முரண்பாடு என்பவையே புனைகதையின் முக்கியமான கூறுகள் என இவானோவிச் என்பார் கூறுகிறார்.<ref>{{Harvard citation | Evanovich | 2006 | p = 83}}</ref> செல்கின் என்பவரோ [[நோக்குநிலை]]யும் புனைகதைகளின் மிகவும் அடிப்படையான கூறுகளில் ஒன்று என்கிறார்.<ref>{{Harvard citation | Selgin | 2007 | p = 41}}</ref>
 
===கருப்பொருள்===
எழுத்துத் துறையில் [[கருப்பொருள் (எழுத்து)|கருப்பொருள்]] என்பது கதைமாந்தர் செய்யும், சொல்லும், சிந்திக்கும் விடயம் ஆகும். இதுவே சூழற் செயற்பாடு (Enveloping Action), முழுநிறை செயற்பாடு (Universal Action), மூலப்படிமச் செயற்பாடு (Archetypal Action) ஆகியவற்றினால் ஒருமைத் தன்மை பெறும் முதன்மைச் செயற்பாடு. கருப்பொருள் அல்லது கதைக்கரு புனைகதைகளின் அடிப்படையான கூறுகளில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இது கதையின் நிகழ்வுகள், செயற்பாடுகள் ஆகியவற்றின் ஒழுங்கமைவைக் குறிக்கும். நுண்நிலை மட்டத்தில் கருப்பொருள் செயற்பாடுகளையும் எதிர்ச் செயற்பாடுகளையும் கொண்டது. இவற்றைத் தூண்டல், விளைவு என்றும் அழைப்பது உண்டு. பேரியல் மட்டத்தில் நோக்கும்போது, கருப்பொருளுக்கு ஒரு தொடக்கம், ஒரு இடைநிலை, ஒரு முடிவு என்பன இருக்கும். கருப்பொருளை ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகளால் ஆன வில் வடிவக் கோட்டினால் குறிப்பது உண்டு. ஏறி இறங்கும் கோட்டுப் பகுதிகள் செயற்பாடுகளின் ஏற்ற இறக்கத்தைக் குறிப்பன. கருப்பொருளுக்கு ஒரு இடை மட்டத்திலான அமைப்பும் உண்டு. இது [[காட்சி (புனைகதை)|காட்சி]], தொகுப்பு என்னும் கூறுகளால் ஆனது. காட்சி என்பது கதை நிகழ்வின் ஒரு அலகு. இதிலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான காட்சித் தொடர்களின் பின்விளைவாக உணர்ச்சிவயமான எதிர்வினையைக் கொண்ட தொகுப்பு இருக்கும். கருப்பொருள் இல்லையேல் கதை இல்லை.
 
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது