புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
ஒரு கதையில் கதை நிகழ்விடம் அக் கதையின் கதைமாந்தர் செயற்படும் இடமாகும். இது ஒரே இடமாகவோ அல்லது பல்வேறு இடங்களாகவோ இருக்கக்கூடும். நிகழ்விடம் ஊர், நகரம், நாடு எனப் பலவாறாக வேறுபடக்கூடும். சில புனைகதைகள் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு கட்டிடத்திலோ கூட நடந்து முடிந்துவிடக்கூடும். ஒரு பேருந்து அல்லது ஒரு வானூர்தியில் நிகழ்ந்து விடுகின்ற புனைகதைகளையும் காண முடியும். அதே நேரம், பல்வேறு நாடுகளில் நிகழும் கதைகளும் உண்டு.
 
கதையின் காலம் என்பது கதையின் செயற்பாடுகள் நிகழும் காலம் ஆகும். இது ஒரு கால இடைவெளியையும், கால கட்டத்தையும் குறிக்கலாம். கதையின் செயற்பாடுகள் இடம்பெறும் மிக முந்திய காலத்துக்கும், மிகப் பிந்திய காலத்துக்கும் இடைப்பட்டதே கால இடைவெளி. ஒரு நாட் கால இடைவெளியில் நிகழ்ந்து முடிந்துவிடும் கதைகளும் பல பத்தாண்டுகள் நிகழும் கதைகளும் உள்ளன. காலகட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட [[பருவகாலம்|பருவகாலத்தில்]] கதை நிகழ்வதாக இருக்கக்கூடும். சமகாலத்தில் நிகழும் கதைகளும், வரலாற்றின் ஒரு கட்டத்தில் இறந்த காலத்தில் நிகழும் கதைகளும், சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ்வதாகக் கற்பனை செய்யப்படும் கதைகளும் உள்ளன. தற்காலத்தில் பரவலாக எழுதப்படும் சமூகக் கதைகளும் பிறவகைக் கதைகளும் தற்காலப் பின்னணியில் எழுதப்படுபவை. [[வரலாற்றுப் புனைகதைகள்புனைகதை]]கள், 50 -100 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையிலான ஏதாவதொரு காலகாட்டப் பகைப்புலத்தில் எழுதப்படுபவை.
 
வெவ்வேறு காலகட்டங்களை மையமாக வைத்து எழுதப்படும் புனைகதைகள் அவ்வக் காலங்களின் சமூகப் பகைப்புலங்களின் இயல்புகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன. ஆனாலும் ஒரே கால கட்டத்தில் நிகழும் கதைகளும் வெவ்வேறான சமூகப் பகைப்புலங்களில் நிகழ்வது சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல புனைகதைகள் [[சாதிப் பாகுபாடு|சாதிப் பாகுபாட்டை]] அடிப்படையாகக் கொண்ட தற்காலத்துச் சமூகப் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. இது போல உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகள் பல [[வகுப்பு முரண்பாடு]]களை அடிப்படையாகக் கொண்ட சமூக அரசியல் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. தற்காலத்தில் [[நடுத்தர வகுப்பு|நடுத்தர வகுப்பினரின்]] சமூகச் சூழலில் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது