புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
வெவ்வேறு காலகட்டங்களை மையமாக வைத்து எழுதப்படும் புனைகதைகள் அவ்வக் காலங்களின் சமூகப் பகைப்புலங்களின் இயல்புகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன. ஆனாலும் ஒரே கால கட்டத்தில் நிகழும் கதைகளும் வெவ்வேறான சமூகப் பகைப்புலங்களில் நிகழ்வது சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல புனைகதைகள் [[சாதிப் பாகுபாடு|சாதிப் பாகுபாட்டை]] அடிப்படையாகக் கொண்ட தற்காலத்துச் சமூகப் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. இது போல உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகள் பல [[வகுப்பு முரண்பாடு]]களை அடிப்படையாகக் கொண்ட சமூக அரசியல் பகைப்புலத்தில் எழுதப்பட்டவை. தற்காலத்தில் [[நடுத்தர வகுப்பு|நடுத்தர வகுப்பினரின்]] சமூகச் சூழலில் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன.
 
===உரையாடல்===
உரையாடலும், புனைகதைகளின் முக்கியமான கூறுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது. கதைமாந்தரிடையே நிகழும் பேச்சு உரையாடல் எனப்படும். கதையின் பல்வேறு அம்சங்களை வாசிப்பவர்களுக்கு உணர்த்துவதில் உரையாடல் பெரிதும் பயன்படுகிறது. கதையை விரும்பியபடி நகர்த்திச் செல்வதில் உரையாடலின் பங்கு முக்கியமானது. கதை மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதற்கும்; பகைப்புலத் தன்மைகளை உணர்த்துவதற்கும்; அந்தந்த நேரத்தில் கதைமாந்தரின் மனநிலை, உணர்வுகள், நோக்கங்கள் போன்றவற்றை வாசிப்பவர்கள் உணரச் செய்வதற்கும் உரையாடல்களைப் படைப்பாளிகள் பயன்படுத்துவர். ஒரு காலத்தில் எழுத்து மொழி நடையிலேயே உரையாடல்கள் எழுதப்பட்டன. தற்காலத்தில் உரையாடல்கள் கதைமாந்தரின் பகைப்புலத் தன்மைகளைப் பொறுத்துப் பல்வேறு பேச்சு வழக்கு மொழிகளில் எழுதப்படுகின்றன. இவ்வேளைகளில் மொழித்தூய்மையையும் படைப்பாளிகள் பலர் கருத்தில் எடுக்காது பேச்சு வழக்கில் காணும் பிற மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துகின்றனர்.
 
புனைகதைகளில் வரும் உரைகள் எல்லாமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே நிகழும் உரையாடல்களாக இருப்பதில்லை. சில வேளைகளில் படைப்பாளியே நேரடியாகக் கதையைக் கூறுவார். இது "கதை சொல்லல்" எனப்படும். கதையின் நிகழ்விடம் அல்லது ஒரு கதைமாந்தரைப் பற்றி வாசகர்களுக்குச் சொல்வதற்காக "வருணனை"களும் உரைப்பகுதியில் இருப்பதுண்டு. இவ்வருணனையைப் படைப்பாளி நேரடியாகவோ அல்லது கதைமாந்தர்களின் வாய்வழியாகவோ செய்வது உண்டு. சில கதைகளில் கதையின் சில அம்சங்களைப் படைப்பாளி தானே விளக்கும் வழக்கமும் உள்ளது. இது "விளக்கவுரை" எனப்படும். சில இடங்களில் கதைமாந்தர் தமக்குத்தாமே பேசிக்கொள்வதன் மூலம், கதையை நகர்த்த உதவுவது உண்டு. இது "தனி மொழி" எனப்படும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது