புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
* சிறு கதைமாந்தர்
 
கதையொன்றில் மிக முக்கியமான கதைமாந்தர், "முதன்மைக் கதைமாந்தர்" ஆவார். இது கதையின் [[தலைவன் (இலக்கியம்)|தலைவன்]] அல்லது தலைவியாக[[தலைவி (இலக்கியம்)|தலைவி]]யாக இருக்கலாம். பொதுவாக இக்கதைமாந்தரை முதன்மைப்படுத்தி அவர்களைச் சுற்றியே கதை நகரும். "எதிர்க் கதைமாந்தர்" முதன்மைக் கதைமாந்தருக்கு எதிர் நிலையில் உள்ளவர். பொதுவாக எதிர்நிலைப் பண்புகள் இருக்கும். முதன்மைக் கதைமாந்தருக்கும் எதிர்க் கதைமாந்தருக்கும் இடையிலான முரண்பாடு கதையை நகர்த்தும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கும். சில கதைமாந்தர் கதையின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். இக் கதைமாந்தர் இல்லாமல் கதையை நகர்த்திச் செல்வது முடியாது. இத்தகைய கதைமாந்தரே "இன்றியமையாக் கதைமாந்தர்". "துணைக் கதைமாந்தர்" என்போர் கதைப் போக்குக்குத் துணை நிற்பவர்கள் எனினும் இவர்களைச் சுற்றிக் கதை நிகழ்வதில்லை. "சிறு கதைமாந்தர்" கதையில் எப்போதாவது வருபவர்கள். இவர்கள் அதிக முக்கியத்துவம் இல்லாத கதைமாந்தர்.
 
கதைமாந்தரை இன்னொரு முறையில், "வளர்ச்சி பெறாக் கதைமாந்தர்", "வளர்ச்சி பெறும் கதைமாந்தர்" என இரு வகையாகவும் பிரிப்பது உண்டு. வளர்ச்சி பெறாக் கதை மாந்தரை "ஒருநிலை மாந்தர்" என்றும், வளர்ச்சி பெறும் கதைமாந்தரை "முழுநிலை மாந்தர்" என்றும் குறிப்பிடுவது உண்டு. இங்கே முதல் வகையினர் கதை ஓட்டத்துடன் வளர்ச்சி அடைவதில்லை. அக்கதைமாந்தரின் பண்புகள் கதை முழுவதும் மாறாது ஒரே நிலையில் இருக்கும். அடுத்த வகைக் கதைமாந்தர் கதை ஓட்டத்தோடு வளர்ச்சி அடைவர். அவர்களின் பண்புகள் கதைக்குப் பொருத்தமான விதத்தில் மாறிச் செல்லும்.
 
===பகைப்புலம்===
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது