பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: rue:Велика депресія
No edit summary
வரிசை 2:
பெற்று பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது அமெரிக்க மக்கள் அனுபவித்த வறுமைக்கான சின்னமாக மாறியது.]]
 
'''பெரும் பொருளியல் வீழ்ச்சி''' (''Great Depression'') அல்லது '''பொருளாதாரப் பெருமந்தம்''' என்பது ஒரு உலகளாவிய [[பொருளியல் பின்னடைவு|பொருளாதார இறங்குமுக நிலையாகும்]]. இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கிய நிகழ்வு இதுவாகும். தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான [[பொருளாதார வீழ்ச்சி]] இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் தொடங்கியதுதொடங்கி ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. வரலாற்றாளர்கள், [[பங்குச்சந்தை]] பெரும் சரிவைக் கண்ட நாளாகிய [[கறுப்புச் செவ்வாய்]] எனப்படும், 1929 ஆம் ஆண்டு [[அக்டோபர்]] 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான [[போர்ப் பொருளாதாரம்|போர்ப் பொருளாதார]] நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
 
 
இப் பொருளியல் வீழ்ச்சி, வளர்ந்துவரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பெரும் தாக்கங்களை உண்டுபண்ணியது. சிறப்பாக [[குடியேற்ற நாடு]]களாக இருந்தவை பெரிதும் பாதிக்கப்பட்டன. உலக வணிகமும் அத்துடன் [[தனியார் வருமானம்]], [[வரி வருமானம்]], [[விலை]]கள், [[இலாபம்]] என்பனவும் ஆழமான பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதிலும் இருந்த [[நகரம்|நகரங்கள்]], முக்கியமாக பாரிய [[தொழிற்சாலை]]களில் தங்கியிருந்த நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. [[கட்டுமானம்|கட்டுமானங்கள்]] பல நாடுகளிலும் முற்றாகவே நின்றுவிட்டன. [[வேளாண்மை]]யும், நாட்டுப் புறங்களும், [[பயிர்]]களுக்கான விலைகள் 40 - 60% வரை வீழ்ச்சியடைந்ததனால் பெரும் தாக்கத்துக்கு உள்ளாயின. வீழ்ச்சி கண்டுகொண்டிருந்த கேள்வி (demand) நிலையாலும்; மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமையாலும்; வேளாண்மை, [[சுரங்கத் தொழில்]], [[மரம் வெட்டல்]] போன்ற [[முதல்நிலைத் தொழில்]] சார்ந்த பகுதிகளே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
 
==காரணங்கள்==
அமெரிக்கப்பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதாரப் பெருமந்தத்திற்குக் முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மக்கள் கடன் வாங்கிப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது இப்பெருமந்தத்தின் காரணமாகும்.<ref> 10 th Standard Social book, Tamilnadu Text book corporation.page 23</ref>
 
1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பொருப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சகட்டத்தை அடைந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமன்றி அவற்றை மறுவிற்பனை செய்வதைன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக செல்வந்தர்கள் ஆகலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.
 
இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் விரைவாகத் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டனர். இதனால் பங்குகளில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளால் கடன் வழங்க இயலாததாலும் விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சியடைந்ததன.
==மீட்பு நடவடிக்கைகள்==
ஹூவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு ஹூவரால் அமைக்கப்பட்ட புணரமைப்பு நிதி நிறுவனம், வங்கிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது. இம்முயற்சி உடனடியானத் தீர்வைத் தராத காரணத்தால் ஹூவரின் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
 
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது