நானமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகளின் மேல் தாவியும், சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கவும் கூடியவை. இவை புல்,தழை, மரக்குருத்து, வேர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். அவசரமாகத் தின்ற உணவை பின்பு மெதுவாக அசை போடும். ஆண் கஸ்தூரி மான் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.
 
பெண் மானுடன் இணைவதற்காக ஆண் கஸ்தூரி மான்களிடம் போராட்டம் நடைபெறும் இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி நிலவும். இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, மற்ற ஆண் கஸ்தூரி மான்களின் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். கடியின் ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக்ஒப்புக்கொண்டு கொள்ளும். ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட்டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரிமான்களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சமயம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண் காரணமாக சில ஆண்மான்கள் இறந்து விடுவதும் உண்டு.
==இனப்பெருக்கம்==
பெண் கஸ்தூரி மானின் கருக்காலம் ஐந்து மாதங்கள் ஆகும். பொதுவாக கஸ்தூரிமான் ஒரு குட்டியை ஈனும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான் குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைத்துவிட்டு உணவு தேடச் செல்லும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்குத் திரும்ப வந்து பாலூட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை குட்டி மான் தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி அடைந்த பிறகு தாயிடமிருந்து பிரிந்து தன் வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும்.
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/நானமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது