நானமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''கவரிமான்''' என்றும் '''கத்தூரி மான்''' (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது [[இமயமலை]]ப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் ''மோசுக்கசு'' (''Moschus'') என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ (''Moschidae'') என்னும் பேரினத்தில் இன்றும் இருக்கும் ஓர் இனம். இவற்றுக்குக் கொம்புகள் கிடையாது, ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண்மான்களுக்கு), இதன் பின்புறம் மணம் தரும் பொருள்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக்கூறுகள். இது [[இரட்டைப்படைக் குளம்பி]] வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.
 
 
 
 
இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் ("சென்ட்டு", perfume) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.
 
==தமிழ் இலக்கியத்தில்==
தமிழிலக்கியத்தில் பல இடங்களில் மணம்கமழும்மணம் கமழும் கவரி அல்லது கத்தூரியைப் பற்றி கூறப்படுகின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:
 
[1] [[சூளாமணி]]யில் (பாடல் 954)<ref>தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி, பாடல் 954 [http://www.tamilvu.org/slet/l3E00/l3E00aru.jsp?n=617]</ref>கவரிகள் குறிப்பிடப்பெறுகின்றன:
வரி 49 ⟶ 44:
==உடலமைப்பு==
கஸ்தூரி மான் உருவில் சிறியது. இதன் பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட நீண்டவை. இவை ஏறத்தாழ 80 முதல் 100 [[செ.மீ]] நீளமும், 50-70 [[செ.மீ]] உயரமும் (தோளருகே) , ஏறத்தாழ 7-17 [[கி.கி]] எடையும் கொண்டதாக இருக்கும். இதன் பற்கள் அமைப்பைக் கீழ்க்காணுமாறு குறிப்பர்:
{{DentalFormula|upper=0.1.3.3|lower=3.1.3.3}}. இதன் தலை சிறியதாகவும் உடல் பகுதி பெரியதாகவும் ஏறத்தாழ முயலைப் போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் மற்ற மான்களிடமிருந்து வேறுபட்டது. இதன் உடல் முழுதும் நீண்டமயிர்கள் அடர்த்தியாகக் காணப்படும். காது பழுப்பு நிறத்துடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும்.

பொதுவாக மானினங்களில் காணப்படும் கொம்புகள் கஸ்தூரி மானின் தலையில் வளர்வதில்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. கொம்பு இல்லாத கஸ்தூரி மான் தனது கூர்மையான கோரைப் பற்களைபற்களைத் தற்காப்புக்காகப் பயன்படுத்துகிறது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது.கத்தூரி கஸ்த்தூரி மான் மலைப் பாங்கான பகுதியில் வாழ்வதற்கேற்ப காலமைப்பைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானதும் கூர்மையானதும் ஆகும். வழுக்குப் பாறைகள், பனி படர்ந்த பெருங்கற்கள் ஆகியவற்றின் மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்புகள் அமைந்துள்ளன.
 
==உணவு==
இவை இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. இவை புல்,தழை, மரக்குருத்து, வேர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். கஸ்தூரி மானின் வயிற்றில் நான்கு உட்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இம்மான் வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறது.
 
==வாழ்க்கை==
வரி 58 ⟶ 56:
ஆண் கஸ்தூரி மான் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.
 
பெண் மானுடன் இணைவதற்காக ஆண் கஸ்தூரி மான்களிடம் போராட்டம் நடைபெறும் இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி நிலவும். இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, மற்ற ஆண் கஸ்தூரி மான்களின் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். கடியின் ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட்டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரிமான்களின்கஸ்துரி மான்களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சமயம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண் காரணமாக சில ஆண்மான்கள் இறந்து விடுவதும் உண்டு.
 
==இனப்பெருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/நானமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது