மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
No edit summary
வரிசை 1:
'''மூச்சுவிடல்''' (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும். மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, [[ஊர்வன]], [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் போன்றவை [[மூச்சியக்கம்|மூச்சியக்கத்தினூடாக]] "[[குளுக்கோசு]]" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை[[மூலக்கூறு]]களை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு [[ஒட்சிசன்]] தேவை. இவ்வாறு உடற் [[உயிரணு|கலங்களுக்குத்]] தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் [[காபனீரொக்சைட்டு|காபனீரொட்சைடை]] வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.
 
வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு எடுத்துச் செல்லுதல் மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது