மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
==பொறிமுறை==
பாலூட்டிகளில், உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல், வயிற்றுப் பகுதியையும், [[நெஞ்சறை]]யையும் பிரிக்கும் மேல்வளைந்த [[பிரிமென்றகடு]] சுருங்கி மட்டமான நிலைக்கு வருவதால் ஏற்படுகிறது. வயிறு தளர் நிலைக்கு வரும்போது அதன் கனவளவு கூடுகிறது இதனால் பிரிமென்றகடு கீழ் நோக்கிச் செல்ல நெஞ்சறையில் அழுத்தம் குறைவதால் காற்று உள் இழுக்கப்படுகிறது. பிரிமென்றகடு இயல்பு நிலைக்கு வரும்போது, பெருமளவுக்கு நுரையீரலின் [[மீள்தகவு|மீள்தகவினால்]] அது சுருங்கி உள்ளிருக்கும் வளியை வெளியேற்றுகிறது. இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் நெஞ்செலும்புகளை[[விலாவெலும்பு]]க் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன.
 
பேச்சு மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது