"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==பொறிமுறை==
பாலூட்டிகளில், வயிற்றுப் பகுதியையும், [[நெஞ்சறை]]யையும் பிரிக்கும் [[பிரிமென்றகடு]] சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருந்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிழ் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்டஹ்ம்அழுத்தம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, நுரையீரலின் [[மீள்தகவு]] ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு எனப்படுகின்றது.[http://highered.mcgraw-hill.com/sites/0072507470/student_view0/chapter23/animation__alveolar_pressure_changes_during_inspiration_and_expiration.html]
 
இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் [[விலாவெலும்பு]]க் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன.
23,842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090451" இருந்து மீள்விக்கப்பட்டது