மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
* '''மூச்சுவிடல்''': வெளியில் இருந்து [[ஆக்சிசன்]] செறிவு கூடிய [[காற்று|வளி]]யை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக [[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள [[காற்றுச் சிற்றறை]]களுக்கு எடுத்துச் செல்லலும், பின்னர் நுரையீரலில் இருந்து [[காபனீரொட்சைட்டு]] செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதலும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும்.<br />
[[நெஞ்சறை|மார்பறையில்]]யில் ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் [[மார்பெலும்பு]], பின்புறம் [[முள்ளந்தண்டு வடம்|முதுகெலும்புத் தொடர்]], பக்கங்களில் [[விலா எலும்பு]]கள் கீழ்ப்புறமாக [[பிரிமென்றகடு|பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்]] (diaphragm) என அமைக்கப்பட்டுள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் [[தசை]]கள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.
* '''நுரையீரலில் வளிமப் பரிமாற்றம்''': நுரையீரலின் நுண்ணறைகளுக்கும், அங்கே காணப்படும் குருதி மயிர்த்துளைக்குழாய்களுக்குமிடையில் நடைபெறும் வளிப் பரிமாற்றமாகும்.
* '''வளிமம் கொண்டு செல்லல்''': நுரையீரலில் உள்ள குருதி மயிர்த் துளைக்குழாய்களிலிருந்து ஆக்சிசன் செறிவு கூடிய [[குருதி]]யானது, குருதிச் [[சுற்றோட்டத் தொகுதி]]யினூடாக, உறுப்புக்களிலுள்ள குருதி மயிர்க்குழாய்களுக்கு கடத்தப்படுதலும், பின்னர் அங்கிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதி நுரையீரலுக்கு கடத்தப்படுவதுமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது