மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5,816 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
பாலூட்டிகளில், வயிற்றுப் பகுதியையும், [[நெஞ்சறை]]யையும் பிரிக்கும் [[பிரிமென்றகடு]] சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருந்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிச் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்தம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, பெருமளவு நுரையீரலின் [[மீள்தகவு]] ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் எனப்படுகின்றது.[http://highered.mcgraw-hill.com/sites/0072507470/student_view0/chapter23/animation__alveolar_pressure_changes_during_inspiration_and_expiration.html].
 
இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் [[விலாவெலும்பு]]க் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன. இங்கே ஏற்படும் விலா எலும்புகள், நெஞ்சறை, வயிற்றறை அசைவுகளுக்கு தசைகள் உதவுகின்றன.
 
பேச்சு, மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும். மூச்சுவிடற் செயற்பாடு [[பயம்]], ஏக்கம் போன்றவை ஏற்படும் சூழ்நிலைகளில் வேறுபடக்கூடும். [[முதுமை]]யினால் அல்லது நுரையீரல் நோய்களினால் நுரையீரலின் மீள்தகவு குறைதல், உடற் பருமனால் வயிறு பெருத்தல், செயற்பாட்டில் உதவும் தசைநார்களின் ஆற்றல் குறைதல் என்பவற்றாலும் மூச்சுவிடல் செயற்பாடு பாதிக்கப்படலாம்.
இங்கே ஏற்படும் விலா எலும்புகள், நெஞ்சறை, வயிற்றறை அசைவுகளுக்கு தசைகள் உதவுகின்றன.
 
[[ஈரூடகவாழி]]களில் இச்செயல்முறை "நேர் அழுத்த மூச்சுவிடல்" எனப்படுகின்றது. தசைநார்கள், வாய்க்குழியின் அடிப்பகுதியைக் கீழ்நோக்கி இழுப்பதால் [[வாய்க்குழி]] பெரிதாகி வெளிக்காற்றை [[மூக்குத்துளை]]கள் ஊடாக உள்ளிழுக்கிறது. வாயையும் மூக்குத்துளைகளையும் மூடியபடி, வாய்க்குழியின் அடிப்பகுதியை மேல்நோக்கித் தள்ளும்போது உள்ளிழுக்கப்பட்ட வளி நுரையீரலுக்குள் செல்கிறது.
பேச்சு மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும்.
 
==மூச்சுவிடுவதைக் கட்டுப்படுத்தல்==
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், விரும்பியும், தன்னியல்பாகவும் கட்டுப்படுத்தக் கூடிய உடற் செயற்பாடுகளுள் மூச்சுவிடலும் ஒன்று.
 
===விரும்பிக் கட்டுப்படுத்தல்===
மூச்சை விரும்பிக் கட்டுப்படுத்தல் பல்வேறு வடிவங்களிலான தியான முறைகளில் காணப்படுகின்றது. யோகப் பயிற்சி முறைகளுள் ஒன்றான மூச்சுப் பயிற்சியில் (பிராணாயாமம்) கட்டுப்படுத்தி மூச்சுவிடுதல் இடம்பெறுகிறது. நீச்சல், பேச்சுப் பயிற்சி, குரற் பயிற்சி போன்றவற்றில் மூச்சை ஒழுங்குபடுத்துவது பற்றிப் பயிற்சி பெறுகின்றனர். மனிதப் பேச்சும் விரும்பி மூச்சைக் கட்டுப்படுத்துவதில் தங்கியுள்ளது.
 
===தன்னியல்புக் கட்டுப்பாடு===
மூளைத்தண்டுப் பகுதியில் உள்ள சிறப்புப் பகுதிகள், மூச்சுவிடுவதைத் தன்னியல்பாகக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட நேரமொன்றில் உடலின் தேவையைப் பொறுத்து மூச்சுவிடும் வீதம், அதன் ஆழம் என்பவை இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன. குருதியில் காபனீரொட்சைடு கூடும்போது, அது குருதியில் உள்ள நீருடன் சேர்ந்து காபோனிக் அமிலத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் [[காற்றில்லா மூச்சியக்கம்]] [[இலக்டிக் அமிலம்|இலக்டிக் அமிலத்தை]] உருவாக்குகிறது. இவை குருதியின் பி.எச் அளவைக் குறைக்கின்றன. இது [[கழுத்துத்தமனி முடிச்சு]], [[பெருந்தமனி முடிச்சு]] ஆகியவற்றிலும், [[நீள்வளைய மையவிழையம்|நீள்வளைய மையவிழையத்திலும்]] உள்ள [[வேதியுணரி]]களைத் தூண்டுகிறது. வேதியுணரிகள், நீள்வளைய மையவிழையத்திலும் [[மூளைப்பாலம்|மூளைப்பாலத்திலும்]] உள்ள மூச்சியக்க மையத்துக்கு கூடுதலான நரம்புத் தூண்டல்களை அனுப்புகின்றன. அங்கிருந்து [[மென்றகட்டு நரம்பு]], [[மார்பு நரம்பு]] ஆகியவற்றூடாக நரம்புத் தூண்டல்கள் செல்கின்றன.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090657" இருந்து மீள்விக்கப்பட்டது