மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
மூச்சுவிடலின்போது வெளியேறும் வளியில் உள்ளிழுக்கும் வளியில் இருப்பதிலும் 4-5% கூடுதலான காபனீரொட்சைடும், 4-5% குறைவான ஒட்சிசனும் இருக்கும். அத்துடன் ஆவிகளும், குறைந்த அளவிலான பிற வளிமங்களும் இருப்பதுண்டு. இவற்றுள் 5% நீராவி, மில்லியன்களில் பல பகுதிகள் [[ஐதரசன்|ஐதரசனும்]] காபனோரொட்சைடும், மில்லியனில் ஒரு பகுதி [[அமோனியா]], மில்லியனில் ஒரு பகுதிக்கும் குறைவான [[அசெட்டோன்]], [[மெந்தோல்]], [[எத்தனோல்]] என்பனவும், வேறுபல [[உறுதியற்ற கரிமச் சேர்வை]]களும் அடங்கியிருக்கும். வெளிவிடும் வளியில் இருக்கக்கூடிய ஒட்சிசன், காபனீரொட்சைடு, பிற வளிமங்கள் என்பவற்றின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, உடற்தகைமை என்பவற்றில் தங்கியுள்ளது.
 
===வளியமுக்கம்===
அவற்றுக்கு மேல் உள்ள வளியின் அளவு குறைவாக இருப்பதால், உயரமான இடங்களில் உள்ள வளியமுக்கம், கடல் மட்டத்தில் உள்ள வளியமுக்கத்திலும் குறைவாக இருக்கும். இந்த அமுக்கக்குறைவு உயர நோய் அல்லது ஒட்சிசன் பற்றாக்குறை நோயை ஏற்படுத்தக்கூடும். நீருக்கு அடியில் வளிமங்களின் அமுக்கம் கடல் கட்டத்தில் இருப்பதிலும் கூடுதலாக இருக்கும். இதனால் இதைக் கொண்டு மூச்சுவிடும்போது, [[நைதரசன் மயக்கம்]], [[ஒட்சிசன் நஞ்சாதல்]] போன்ற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
 
==பண்பாட்டுச் சிறப்பு==
பல்வேறு சமயத்தொடர்பான செயற்பாடுகளில் மூச்சுக் கட்டுப்பாடு சிறப்பிடம் வகிப்பதைக் காண முடியும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. இசையில், புல்லாங்குழல், நாதசுரம் போன்ற பல்வேறு மூச்சுக் கருவிகளை இசைப்பதில் மூச்சு பயன்படுகின்றது. பல பண்பாடுகளில் மூச்சுத் தொடர்பு கொண்ட [[இருமல்]], [[தும்மல்]], [[கொட்டாவி]], [[விக்கல்]] போன்ற தோற்றப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் காணப்ப்டுகின்றன. யாரோ நினைப்பதால் இருமல் வருவதாக நம்புவதும், தும்மும்போது ஒவ்வொரு தும்மலுக்கும் நூறு, இருநூறு என்று எண்ணுவதும் தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது. தும்முவதைச் [[சகுனப் பிழை]]யாக எண்ணும் வழக்கமும் இந்துக்களிடையே உள்ளது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுவிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது