"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

934 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மூச்சுவிடல்''' (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும்.<ref>{{cite book |title=Biology |author=Peter Raven, George Johnson, Kenneth Mason, Jonathan Losos, Susan Singer |publisher= McGraw-Hill Science/Engineering/Math; |edition=8 ed. |year=2007 |isbn=0073227390 |chapter=The capture of oxygen: Respiration}}</ref> மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, [[ஊர்வன]], [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் போன்றவை [[மூச்சியக்கம்|மூச்சியக்கத்தினூடாக]] "[[குளுக்கோசு]]" போன்ற ஆற்றல் செறிந்த [[மூலக்கூறு]]களை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு [[ஒட்சிசன்]] தேவை. இவ்வாறு உடற் [[உயிரணு|கலங்களுக்குத்]] தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் [[காபனீரொக்சைட்டு|காபனீரொட்சைடை]] வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.
 
வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள [[காற்றுச் சிற்றறை]]களுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் '''உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல்''' (inhalation) என்றும், பின்னர் காற்றுச் சிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் '''வெளிமூச்சு அல்லது மூச்செறிதல்''' (exhalation) என்றும் அழைக்கப்படும்.
 
===விரும்பிக் கட்டுப்படுத்தல்===
மூச்சை விரும்பிக் கட்டுப்படுத்தல் பல்வேறு வடிவங்களிலான தியான முறைகளில் காணப்படுகின்றது. யோகப் பயிற்சி முறைகளுள் ஒன்றான மூச்சுப் பயிற்சியில் (பிராணாயாமம்) கட்டுப்படுத்தி மூச்சுவிடுதல் இடம்பெறுகிறது.<ref>Swami Saradananda, The Power of Breath, Castle House: Duncan Baird Publishers, 2009</ref> நீச்சல், பேச்சுப் பயிற்சி, குரற் பயிற்சி போன்றவற்றில் மூச்சை ஒழுங்குபடுத்துவது பற்றிப் பயிற்சி பெறுகின்றனர். மனிதப் பேச்சும் விரும்பி மூச்சைக் கட்டுப்படுத்துவதில் தங்கியுள்ளது.
 
உடல்நலத்தோடு கூடிய ஒருவர் மூச்சுவிடுவதை வேண்டுமென்று நீண்ட நேரம் நிறுத்திவைக்க முடியாது. ஒருவர் வளியை உள்ளெடுக்காவிட்டால், குருதியில் காபனீரொட்சைடு அதிகமாகி [[வளி வேட்கை]] ஏற்படும். மூச்சுவிடாவிட்டால், சில நிமிடங்களிலேயே உடலின் உள்ளக ஒட்சிசன் அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து மூளைச் சிதைவையும் தொடர்ந்து இறப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான அடக்கமுடியாத [[மறிவினை]] ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. எனினும், இரண்டு மணி நேரம் வரை மனிதர் காற்றில்லாமல் உயிருடன் இருந்ததும் உண்டு. ஆனால் இது குளிர் நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலமும்மூலம் [[பாலூட்டிகளுக்குரிய மூழ்குதல் தெறிவினை]] (mammalian diving reflex) தூண்டப்படுவதாலும்,<ref>Ramey CA, Ramey DN, Hayward JS. Dive response of children in relation to cold-water near drowning. J Appl Physiol 2001;62(2):665-8.Source: Diana Hacker (Boston: Bedford/St. Martin’s, 2002).Adapted from Victoria E. McMillan (Boston: Bedford/St. Martin’s, 2001). See it cited [http://www.dianahacker.com/pdfs/Hacker-Mart-CBE.pdf here]</ref> தற்காலிகமாக உடலியக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமுமே இயலக்கூடியது.
 
ஒருவர் குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு மேல் தானாகவே மூச்சுவிடுவதை நிறுத்தி வைத்திருப்பார் எனின் அவர் மயக்கம் அடைந்து விடுவார், பின்னர் மூச்சுவிடல் தானாகவே நிகழத் தொடங்கிவிடும். இதனால், தன்னியல்பாக மூச்சுவிடல் நிகழ முடியாதபடி, நீரில் அமிழ்தல் போன்ற வேறு நிலைமைகள் இருந்தாலன்றி, மூச்சைத் தானே நிறுத்தி வைப்பதன் மூலம் ஒருவர் [[தற்கொலை]] செய்துகொள்ள முடியாது.
==பண்பாட்டுச் சிறப்பு==
பல்வேறு சமயத்தொடர்பான செயற்பாடுகளில் மூச்சுக் கட்டுப்பாடு சிறப்பிடம் வகிப்பதைக் காண முடியும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. இசையில், புல்லாங்குழல், நாதசுரம் போன்ற பல்வேறு மூச்சுக் கருவிகளை இசைப்பதில் மூச்சு பயன்படுகின்றது. பல பண்பாடுகளில் மூச்சுத் தொடர்பு கொண்ட [[இருமல்]], [[தும்மல்]], [[கொட்டாவி]], [[விக்கல்]] போன்ற தோற்றப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் காணப்ப்டுகின்றன. யாரோ நினைப்பதால் இருமல் வருவதாக நம்புவதும், தும்மும்போது ஒவ்வொரு தும்மலுக்கும் நூறு, இருநூறு என்று எண்ணுவதும் தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது. தும்முவதைச் [[சகுனப் பிழை]]யாக எண்ணும் வழக்கமும் இந்துக்களிடையே உள்ளது.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090719" இருந்து மீள்விக்கப்பட்டது