லிவர்பூல் கால்பந்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7,635 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
1985 ஆம் ஆண்டில் [[பெல்ஜியம்]] நாட்டின் [[பிரசெல்சு|பிரசெல்ஸ்]] நகரில் ஹெய்செல் மைதானத்தில் நடந்த [[ஐரோப்பிய கோப்பை]] இறுதிப் போட்டியின் போது அரங்கின் மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர். இதனையடுத்து அனைத்து இங்கிலாந்து அணிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐரோப்பிய போட்டிகளில் பங்கெடுக்க முடியாதபடி தடைசெய்யப்பட்டது. அனைத்துப் பிற ஆங்கிலேய அணிகளுக்கும் மறு அனுமதி கிட்டிய பின்னரும் லிவர்பூல் ஒரு ஆண்டு கூடுதலாய் தண்டனை பெற்றது. நான்கு ஆண்டுகள் கழித்து, 96 லிவர்பூல் ரசிகர்கள் ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த எஃப்.ஏ கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி இறந்தனர். இதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட டெய்லர் அறிக்கையின் படி அனைத்து உயர் பிரிவு மைதானங்களிலும் நிற்கும் வசதி 1990களின் நடுப்பகுதி வரை தடை செய்யப்பட்டது.
 
== வரலாறு ==
 
1892 ஆம் ஆண்டில் எவர்ட்டன் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அன்பீல்டு நில உரிமையாளர் ஜான் ஹௌல்டிங்கிற்கு இடையே நடந்த சர்ச்சயயை தொடர்ந்து எவர்ட்டன் அணி குடிஸன் பார்க் மைதானத்திற்கு இடம்பெயர்ந்தது. அன்பீல்டு மைதானத்தில் ஆடுவதற்காக ஜான் ஹௌல்டிங் "எவர்ட்டன் எஃப் சி அண்டு அத்லெடிக் கிரௌண்ட்ஸ் லிமிடெட்" என்ற பெயரில் புது கால்பந்து அணியை கால்பந்து சங்கத்தில் பதிவு செய்ய முயன்றார். ஏற்கனவே எவர்ட்டன் என்ற பெயரில் அணி இருப்பதால் கால்பந்து சங்கம் அனுமதி மறுத்தது. இதனையடுத்து லிவர்பூல் கால்பந்து அணி என்ற பெயர் பதிவு செய்யப்பட்டது.
 
முதல் சீசனில் லங்காஷயர் லீக் வென்றதையடுத்து, கால்பந்து லீக் இரண்டாம் பிரிவுக்கு முன்னேறியது. 1895-96 ஆம் அண்டு இரண்டாம் பிரிவிலிருந்து முன்னேறி முதல் பிரிவில் ஆடும் தகுதியை பெற்றது. முதல் பிரிவு லீக் சாம்பியன்ஷிப்களை 1901 மற்றும் 1906 ஆண்டுகளில் வென்றது. 1914 ஆம் ஆண்டு முதன் முறையாக எப்.எ. கோப்பை இறுதி போட்டிவரை முன்னேறி 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 1922 மற்றும் 1923 ல் தொடர்ச்சியாக முதல் பிரிவு லீக் சாம்பியன்ஷிப்களை வென்றது. 1946-47-ல் ஐந்தாவது லீக் சாம்பியன்ஷிப்பை வென்றது.1953-54 பருவத்தில் முதல் பிரிவில் ஆடும் தகுதியை தக்க வைத்து கொள்ளும் அளவிற்கு புள்ளிகளை பெறாததால் இரண்டாம் பிரிவுக்கு தள்ளப்பட்டது. 1958-59-ல் எப்.எ. கோப்பையில் லீக் அல்லாத வர்செஸ்டர் நகர அணியிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அணியின் புது மேனேஜராக [[Bill Shankly|பில் ஷாங்லி]] நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர்கள் ஸ்ட்ராட்டஜி பற்றி விவாதிக்க அறை வேண்டும் என்று கருதிய [[Bill Shankly|ஷாங்லி]] பூட்கள் வைக்கும் அறையை மாற்றியமைத்து பின்னாளில் மிகவும் போற்றப்பற்ற "பூட் ரூம்"-ஐ நிறுவினார். ஜோ பகான், ரூபன் பென்னெட், மற்றும் [[Bob Paisley|பாப் பைஸ்லீ]] ஆகியோரை பயிற்சியாளர்களாக நியமித்தார். மாற்றங்களின் முதற் கட்டமாக 24 வீரர்களை அணியிலிருந்து விடுவித்தார்.
 
1961-62 பருவத்தில் இரண்டாம் பிரிவில் முதலிடத்தை பிடித்து மீண்டும் முதல் பிரிவுக்கு பதவி உயர்வு மற்றும் பெற்றது. 1963-64 பருவத்தில் ஆறாவது லீக் சாம்பியன்ஷிப்பை வென்றது.1965-ல் முதன் முறையாக எப்.எ. கோப்பையையும், 1965-66 பருவத்தில் ஏழாவது லீக் சாம்பியன்ஷிப்பையும் வென்றது. ஐரோப்பிய கப் வின்னர்ஸ் கப் இறுதி போட்டியில் போருஸ்யா டோர்ட்மண்டு அணியிடம் 1966-ல் தோற்றது. 1972-73 பருவத்தில் முதன் முறையாக இரண்டு கோப்பைகளை வென்றது. எட்டாவது லீக் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய அணி, தன்னுடைய முதலாவது யு.இ.எப்.எ கோப்பையை வென்றது. 1973-74 பருவத்தில் இரண்டாம் எப்.எ. கோப்பையை வென்ற [[Bill Shankly|ஷாங்லி]] மேனேஜர் பதவியில் இருந்து விலகி, பொறுப்பை தனது உதவியாளரான [[Bob Paisley|பாப் பைஸ்லீ]]-யிடம் ஒப்படைத்தார். 1975-76 பருவத்தில் ஒன்பதாவது லீக் சாம்பியன்ஷிப்பையும்,இரண்டாம் யு.இ.எப்.எ கோப்பையையும் வென்றது. 1975-76 பருவத்தில் பத்தாவது லீக் சாம்பியன்ஷிப்பையும், ஐரோப்பா கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. ஆனால் எப்.எ. கோப்பை இறுதி போட்டியில் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. 1975-76 பருவத்தில் ஐரோப்பா கோப்பையை இரண்டாம் வென்று தக்கவைத்துகொண்டனர். 1978–79 மற்றும் 1979–80 பருவங்களில் முறையே 11-வது மற்றும் 12-வது லீக் சாம்பியன்ஷிப்புகளை கைப்பற்றியது. 1980-81 பருவத்தில் மூன்றாவது ஐரோப்பா கோப்பையை வென்ற லிவர்பூல், முதன் முறையாக லீக் கோப்பையை கைப்பற்றியது.
 
== வீரர்கள் ==
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1091555" இருந்து மீள்விக்கப்பட்டது